ஆசுமி (Aasmi) (சிங்களம்: ආස්මී) என்பது ஒரு பாரம்பரியமான இனிப்புப் பண்டமாகும். சிங்களப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு, திருமணங்கள் மற்றும் பிறந்தநாள் விழாக்களில் இலங்கையில் இந்த இனிப்புப் பண்டம் வழங்கப்படுகிறது.[1][2][3]

ஆசுமி
மாற்றுப் பெயர்கள்அசுமி, ஆசுமீ
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு
தொடங்கிய இடம்இலங்கை
பரிமாறப்படும் வெப்பநிலைகுளிரூட்டப்பட்டது
முக்கிய சேர்பொருட்கள்அரிசி மாவு, தேங்காய்ப்பால், இலவங்கப்பட்டை இலைகள், சர்க்கரை
வேறுபாடுகள்வெண்டிக்காய் சாறு

அரிசி மாவு மற்றும் தேங்காய்ப்பால் கலவையுடன் இது தயாரிக்கப்படுகிறது. கறுவா மர இலையான இலவங்கப்பட்டை இலைகள் பிரித்தெடுக்கப்பட்ட சாறுடன் கலந்து, பின்னர் தேங்காய் எண்ணெயில் ஆழமாக வறுக்கப்பட்டு இது தயாரிக்கப்படுகிறது.[4] வெண்டிக்காய் சாறு பெரும்பாலும் குருந்துக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் அது சில நாட்களுக்கு சர்க்கரை பாகில் ஊற வைக்கப்பட்டு உணவு வண்ணம் கலக்கப்பட்டு மீண்டும் ஆழமாக வறுக்கப்படுகிறது [5]

மேற்கோள்கள் தொகு

  1. Thurab, Rafiya (28 February 2019). "7 must-have Sri Lankan festive sweets". News 1st. https://www.newsfirst.lk/2019/02/28/7-must-have-sri-lankan-festive-sweets/. 
  2. Samarawickrama, Inoka (9 April 2017). "Aasmi, the savoury sweet of Avurudu". Sunday Observer. https://www.sundayobserver.lk/2017/04/09/spectrum/aasmi-savoury-sweet-avurudu. 
  3. "Sri Lankan Sweetmeats". Ceylon Travell. பார்க்கப்பட்ட நாள் 7 September 2020.
  4. Ekanayake, Meththa N. (31 October 2019). "Aasmee Recipe". Times of India. https://recipes.timesofindia.com/recipes/aasmee/rs71373331.cms. 
  5. Senerath-Yapa, Yomal (April 2017). "Aasmi: Filigreed White Honeycombs". Serendib. Sri Lankan Airlines. பார்க்கப்பட்ட நாள் 7 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசுமி&oldid=3721721" இலிருந்து மீள்விக்கப்பட்டது