ஆசுலி பார்ட்டி

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

ஆசுலி பார்ட்டி (Ashleigh Barty, பிறப்பு: 24 ஏப்ரல் 1996) ஆத்திரேலியத் தொழில்-சார் டென்னிசு வீராங்கனையும், முன்னாள் துடுப்பாட்ட வீராங்கனையும் ஆவார். இவரை மகளிர் டென்னிசு சங்கம் (ம.டெ.ச-WTA) மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் உலகின் முதலாமவர் எனத் தரப்படுத்தியுள்ளது. ஆத்திரேலியப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் ஆத்திரேலியாவின் இரண்டாவது முதல்தர வீராங்கனையும் ஆவார். இவருக்கு முன்னர் எவோன் கோலகொங் காவ்லி என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆத்திரேலிய முதல் தர தென்னிசு வீராங்கனை ஆவார்.[a] ஆசுலி பார்ட்டி மகளிர் டென்னிசு சங்கப் போட்டிகளில் 12 ஒற்றையர் பட்டங்களையும், 11 இரட்டையர் பட்டங்களையும் வென்றுள்ளார். இவற்றுள் ஒரு ஒற்றையர் 2019 பிரெஞ்சு ஓப்பன், ஒரு ஒற்றையர் 2021 விம்பிள்டன் கோப்பை, ஒரு ஒற்றையர் 2022 ஆத்திரேலிய ஓப்பன்,[3][4] மற்றும் ஒரு இரட்டையர் 2018 யூ.எசு. ஓப்பன் பட்டமும் அடங்கும்.

ஆசுலி பார்ட்டி
Ashleigh Barty
2019 இல் பார்ட்டி
நாடு ஆத்திரேலியா
வாழ்விடம்இப்சுவிச், குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா
பிறப்பு24 ஏப்ரல் 1996 (1996-04-24) (அகவை 27)[1]
இப்சுவிச், குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா
உயரம்1.66 மீ
தொழில் ஆரம்பம்2010
விளையாட்டுகள்வலக்கை
பயிற்சியாளர்கிரைக் டைசர்
பரிசுப் பணம்US$ 21,665,851[2]
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்305–102 (74.94%)
பட்டங்கள்15
அதிகூடிய தரவரிசைஇல. 1 (24 சூன் 2019)
தற்போதைய தரவரிசைஇல. 1 (9 செப்டம்பர் 2019)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (2022)
பிரெஞ்சு ஓப்பன்வெ (2019)
விம்பிள்டன்வெ (2021)
அமெரிக்க ஓப்பன்4R (2018, 2019)
ஏனைய தொடர்கள்
Tour Finalsவெ (2019)
ஒலிம்பிக் போட்டிகள்1R (2020)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்200–64 (75.76%)
பட்டங்கள்12
அதியுயர் தரவரிசைஇல. 5 (21 மே 2018)
தற்போதைய தரவரிசைஇல. 83 (10 சனவரி 2022)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்இறுதி (2013)
பிரெஞ்சு ஓப்பன்இறுதி (2017)
விம்பிள்டன்இறுதி (2013)
அமெரிக்க ஓப்பன்வெ (2018)
ஏனைய இரட்டையர் தொடர்கள்
Tour Finalsஅரையிறுதி (2018)
ஒலிம்பிக் போட்டிகள்காலிறுதி (2020)
கலப்பு இரட்டையர்
சாதனைகள்7–8
பட்டங்கள்0
பெருவெற்றித் தொடர்
கலப்பு இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்2R (2014)
பிரெஞ்சு ஓப்பன்1R (2013)
விம்பிள்டன்காலிறுதி (2013)
அமெரிக்க ஓப்பன்காலிறுதி (2014)
ஏனைய கலப்பு இரட்டையர் தொடர்கள்
ஒலிம்பிக் போட்டிகள் (2020)
அணிப் போட்டிகள்
கூட்டமைப்புக் கோப்பைஇறுதி (2019)
ஒப்மேன் கோப்பைRR (2013, 2019)
இற்றைப்படுத்தப்பட்டது: 29 சனவரி 2022.

ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தில் இப்சுவிச் நகரில் பிறந்த ஆசுலி தனது நான்காவது அகவையில் பிரிஸ்பேன் நகரில் தென்னிசு விளையாட ஆரம்பித்தார். இளைஞர் பிரிவில் 2011 ஆம் ஆண்டில் விம்பிள்டனில் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்று, உலகில் இல. 2 இடத்தைப் பிடித்தார். 2013 WTA சுற்று இரட்டையர் பிரிவில் ஆரம்ப கால வெற்றியைப் பெற்றார். 16-வது அகவையில் ஆத்திரேலியத் திறந்த போட்டி உட்பட மூன்று கிராண்ட்சிலாம் இரட்டையர் போட்டிகளில் இரண்டாவதாக வந்தார். 2014 பிற்பகுதியில், இவர் தென்னிசு போட்டிகளில் இருந்து காலவரையற்ற இடைவெளி எடுக்க முடிவு செய்தார். இந்த இடைவெளியில் அவர் துடுப்பாட்டத்தில் ஆர்வம் காட்டினார். துடுப்பாட்டத்தில் முறையான பயிற்சி இல்லாத போதிலும், பிரிஸ்பேன் ஹீட் அணியில் விளையாடினார்.

ஆசுலி பார்ட்டி 2016 தொடக்கத்தில் தென்னிசுக்குத் திரும்பினார். 2017 ஆம் ஆண்டில் ஒற்றையர் பிரிவில் மலேசியத் திறந்த சுற்றில் தனது முதலாவது டபிள்யூடிஏ பட்டத்தை வென்று, உலகில் 17-வது இடத்தைப் பிடித்தார். தனது முதலாவது கிரான்ட்-சிலாம் வெற்றியை இரட்டையர் ஆட்டத்தில் 2018 இல் பெற்றார். மீண்டும் 2019 இல் இரட்டையர் பட்டம் வென்றார்.

பெருவெற்றித் தொடர் இறுதிப் போட்டிகள் தொகு

ஒற்றையர்: 3 (3 வெற்றிகள்) தொகு

முடிவு ஆண்டு தொடர் தரை எதிராளி ஆட்ட முடிவுகள்
வெற்றி 2019 பிரெஞ்சு ஓப்பன் களிமண்   மார்க்கேத்தா வந்துரோசொவா 6–1, 6–3
வெற்றி 2021 விம்பிள்டன் புற்றரை   கரொலீனா பிளிசுக்கோவா 6–3, 6–7(4–7), 6–3
வெற்றி 2022 ஆத்திரேலிய ஓப்பன் கடினமான தரை   தானியேல் கொலின்சு 6–3, 7–6(7–2)

குறிப்புகள் தொகு

  1. மகளிர் டென்னிசு சங்கம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் 1975 இல் மார்கரெட் கோர்ட் என்பவரும் உலகின் முதல்-தர ஆட்டக்காரராக இருந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Ashleigh Barty". WTA Tennis. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
  2. "Career Prize Money Leaders" (PDF). WTA Tennis. Archived (PDF) from the original on 6 November 2019. பார்க்கப்பட்ட நாள் 24 April 2017.
  3. "Barty triumphs over Collins, becomes first Australian Open home champion since 1978". WTA. January 29, 2022.
  4. Jurejko, Jonathan (29 January 2022). "Australian Open: Ashleigh Barty wins first Melbourne title by beating Danielle Collins". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 29 January 2022.

வெளி இணைப்புகள் தொகு

  வெளி ஒளிதங்கள்
  One Plus One: Ash Barty, One Plus One, ABC News
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசுலி_பார்ட்டி&oldid=3381897" இலிருந்து மீள்விக்கப்பட்டது