அஜ்மீர் மாவட்டம்
இராசத்தானில் உள்ள மாவட்டம்
(ஆஜ்மீர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அஜ்மீர் மாவட்டம் (Ajmer district) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. அஜ்மீர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இங்கு இந்து, இசுலாம், சமணம் ஆகிய மதத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.
மாவட்டப் பிரிப்பு
தொகுஅஜ்மீர் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு ஆகஸ்டு 2023ல் பியாவர் மாவட்டம் மற்றும் கேக்கிரி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது.[1]
மக்கட் தொகை
தொகுஇம்மாவட்டத்தின் மொத்த மக்கட் தொகை 21,80,526 ஆகும்.[2]
- இந்து-18,69,044
- இஸ்லாம்-2,44,341
- சமணம்-47,812
அமைப்பு
தொகுஅஜ்மீர் மாவட்டம் 8,481 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இது ராஜஸ்தான் மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. வடக்கே நாக்பூர் மாவட்டமும், கிழக்கே ஜெய்ப்பூர் மற்றும் டோங் மாவட்டங்களும் தெற்கே பில்வாரா மாவட்டமும், மேற்கே பாலி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
இதனையும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- அஜ்மேர் மாவட்ட அரசின் தளம் பரணிடப்பட்டது 2015-02-09 at the வந்தவழி இயந்திரம்
- Ajmer on Marwadis.com
- eAjmer.co.in பரணிடப்பட்டது 2021-11-30 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state
- ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.