ஆடுதுறை - 12 (நெல்)

ஏ டி டீ - 12 (ADT 12) வட்டார வழக்கு சித்ர காளி (Chitrakali) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

ஆடுதுறை - 12
ADT 12
வேளாண் பெயர்
சித்ர காளி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
3900 கிலோ எக்டேர்
வெளியீடு
1936
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தொகு

தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1936 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

காலம்

தொகு

குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 115 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறைந்த கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]

சாகுபடி

தொகு

நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் பரவலாக சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது.[2]

சிறப்புப் பண்புகள்

தொகு
  • இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 3900 கிலோவரை (3.9 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இவ்வகையை சாகுபடி செய்ய, குறுவைப் பருவம் மிகவும் சிறந்தது.
  • இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் நீண்டு தடித்து காணப்படுகிறது.
  • இதன் நெற்பயிர் ஒழுங்கற்ற நீர்ப்பாசனத்தை தாங்கக்கூடியது. [1][2]


இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.
  2. 2.0 2.1 2.2 "Rice Knowledge Management Portal ADT 12". www.rkmp.co.in (ஆங்கிலம்) - 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-08-22.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Paddy Varieties of Tamil Nadu - Long duration varieties". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_12_(நெல்)&oldid=3715218" இலிருந்து மீள்விக்கப்பட்டது