ஆணிவேர்த் தொகுப்பு
ஆணிவேர் தொகுப்பு (taproot) தாவரம் வளரும்போது விதையில் இருந்து உருவாகும் முதல் வேர் முளைவேர் எனப்படும். பெரும்பாலான இருவித்திலைத் தாவரங்களில் இந்த முளைவேர், வேர்த் தொகுதியில் முக்கியமான ஆணிவேர் அல்லது மூலவேர் எனப்படும் வேராக வளர்ச்சியுறுகிறது. நிலத்துள் நேராகக் கீழ் நோக்கிச் செல்லும் ஆணிவேரில் இருந்து, பக்கவேர்கள் வளர்கின்றன. ஆணிவேர் பக்கவேர்களிலும் நீளமாக வளரும்.என்பது இருவித்திலை தாவரங்களில் காணப்படும் வேர் ஆகும். தாவரம் வளரும்போது விதையில் இருந்து உருவாகும் முதல் வேர் முளைவேர் எனப்படும். பெரும்பாலான இருவித்திலைத் தாவரங்களில் இந்த முளைவேர், வேர்த் தொகுதியில் முக்கியமான ஆணிவேர் அல்லது மூலவேர் எனப்படும் வேராக வளர்ச்சியுறுகிறது. ஆணிவேர் பக்கவேர்களை விட நீளமாக வளரும்.[1] தாவரத்தின் தேவைக்கு அதிகமான சேமிக்கப்படும் உணவு கேரட் போன்ற சில தாவரங்களில் உருமாற்றம் பெற்று உள்ளது. இதுவும் ஆணிவேர் ஆகும். ஆணிவேர் தொகுப்புக்கு மாற்றாக ஒருவித்திலை தாவரவேர்கள் உள்ளது. இது சல்லிவேர் என்று அழைக்கப்படுகிறது. இது மண்ணிலிருந்து தோன்றும் போதே பல கிளைகளுடன் கூடிய வேர்களாக கொத்தாக வளரும் தன்னையுடையது.
விளக்கம்
தொகுஆஞ்சியோஸ்போர்ம்களின் ஒரு பிரிவான இருவித்திலை தாவரத்தில் ஆணிவேர் தொகுப்பு காணப்படுகிறது.[2] இது முளைவேர் மூலம் விதை விரிவடைவதால் உருவாகும் ஒரு முக்கிய வேர் ஆகும். ஆணிவேர் தாவரத்தின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இருக்கும்.[2][3].
ஆணிவேரின் உருமாற்றங்கள் பொதுவான வடிவங்கள் பின்வருமாறு
- கூம்பு வடிவம்: அதாவது மேல்மட்டத்தில் அகலமாகவும், கீழ் நோக்கி சீராகவும் இருக்கும். எ.கா. கேரட்.
- நீள்வடிவம் : இந்த வேர் நடுத்தர மற்றும் பரவலாக மேல் மற்றும் கீழ் நோக்கி பரவலாக உள்ளது: எ.கா. முள்ளங்கி.
- நாப்பிஃபாம் ரூட்: ஒரு உச்சிஅல்லது மலை போன்ற தோற்றம் கொண்டது. இது மிகவும் பரந்த அளவில் உள்ளது மற்றும் திடீரென்று கீழே ஒரு வால் போன்று சுறுங்கி காண்ப்படும் : எ.கா. டர்னிப்.
ஆணிவேர் உருமாற்றம் கொண்ட சில தாவரங்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Botany Manual: Ohio State University". Archived from the original on 2004-08-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-13.
- ↑ 2.0 2.1 James D. Mauseth (2009). Botany: an introduction to plant biology. Jones & Bartlett Learning. pp. 145–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7637-5345-0. பார்க்கப்பட்ட நாள் 28 September 2010.
- ↑ Linda Berg; Linda R. Berg (23 March 2007). Introductory Botany: Plants, People, and the Environment. Cengage Learning. pp. 112–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-534-46669-5. பார்க்கப்பட்ட நாள் 28 September 2010.
வெளியிணைப்புகள்
தொகு- 2006-01-13, Sciencedaily: Deep-rooted Plants Have Much Greater Impact On Climate Than Experts Thought Citation: "...The tap roots transfer rainwater from the surface to reservoirs deep underground and redistribute water... increases photosynthesis and the evaporation of water... by 40 percent in the dry season... During the wet season, these plants can store as much as 10 percent of the annual precipitation as deep as 13 meters (43 feet) underground, to be tapped during the dry months... tree roots acting like pipes to allow water to shift around much faster than it could otherwise percolate through the soil."
- Fullerton Arboretum on taproots பரணிடப்பட்டது 2008-03-08 at the வந்தவழி இயந்திரம்