ஆண்டர்சன் முதலை பல்லி
ஆண்டர்சன் முதலை பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சாலமாண்டிரிடே
|
பேரினம்: | எக்கினோட்ரிடன்
|
இனம்: | எ. ஆண்டர்சோனி
|
இருசொற் பெயரீடு | |
எக்கினோட்ரிடன் ஆண்டர்சோனி (பெளலஞ்சர், 1892) | |
வேறு பெயர்கள் | |
தைலோடோதிரிடான் ஆண்டர்சோனி பெளலஞ்சர், 1892 |
ஆண்டர்சன் முதலை பல்லி (Anderson's crocodile newt), ஆண்டர்சன் பல்லி, இரியுக்யூக்கி முள் பல்லி, அல்லது சப்பானிய மரு பல்லி (எக்கினோட்ரிடன் ஆண்டர்சோனி) என்பது சப்பானின் இரியூக்கியூ தீவுகளில் காணப்படும் சலமாண்டர் குடும்பத்தில் உள்ள ஒரு சாலமண்டர் சிற்றினமாகும். மேலும், முன்பு, வடக்கு தைவானில் உள்ள குவான்யின் மலையில் காணப்பட்ட ஆண்டர்சன் முதலைப் பல்லி இப்போது அழிந்துவிட்டதாக நம்பப்படுகிறது.[2][3]
விளக்கம்
தொகுஎச்சினோட்ரிட்டன் ஆண்டர்சோனி தடிமனான, தட்டையான சாலமண்டர். இதன் தலை அகலமாகவும் முக்கோண வடிவத்திலும் உள்ளது. 12-15 வெளிப்படையான குமிழி போன்ற பக்கவாட்டு சுரப்பிகள் உள்ளன. இதனுடைய உடல் நிறம் ஒரே மாதிரியாக அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறத்திலிருக்கும். வாலடிப்பகுதி, கால் பாதம், பொதுப் புழைப் பகுதி மஞ்சள்-ஆரஞ்சு நிறத்திலிருக்கும். இது அதிகபட்சமாக 80 mm (3.1 அங்) மிமீ வளரக்கூடியது.[3]
வாழ்விடமும் பாதுகாப்பும்
தொகுஆண்டர்சன் முதலை பல்லியின் இயற்கையான வாழிடமாகப் பரந்த இலைகள் கொண்ட பசுமையான காடுகள், இரண்டாம் நிலை காடுகள், புல்வெளிகள், சதுப்பு நிலங்கள் உள்ளன. இது கரும்பு வயல்களிலும் அதற்கு அருகிலும் காணப்படுகிறது. இது குளங்கள் மற்றும் தற்காலிகக் குளங்கள் போன்ற நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கிறது. பிற நேரங்களில் வயது வந்த சாலமண்டர்கள் இலைக் குப்பைகளிலும், பாறை பிளவுகளிலும், பாறைகள் மற்றும் மரக்கட்டைகளின் கீழும் வாழ்கின்றன.[3]
எச்சினோட்ரிட்டன் ஆண்டர்சோனி அசாதாரணமானது. மேலும் இது வாழிட இழப்பு மற்றும் சட்டவிரோதச் செல்லப்பிராணி வர்த்தகத்திற்கான சேகரிப்பு ஆகியவற்றால் அச்சுறுத்தப்படுகிறது.
மேலும் காண்க
தொகு- ஆண்டர்சன் சாலமண்டர் (அம்பிஸ்டோமா ஆண்டர்சனி)
மேற்கோள்கள்
தொகு- ↑ IUCN SSC Amphibian Specialist Group (2021). "Echinotriton andersoni". IUCN Red List of Threatened Species 2021: e.T59446A63869090. doi:10.2305/IUCN.UK.2021-1.RLTS.T59446A63869090.en. https://www.iucnredlist.org/species/59446/63869090. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ Frost, Darrel R. (2014). "Echinotriton andersoni (Boulenger, 1892)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 28 January 2015.
- ↑ 3.0 3.1 3.2 Sparreboom, Max; Wu, Yunke. "Echinotriton andersoni (Boulenger, 1892)". Salamanders of China LifeDesk. Archived from the original on 29 January 2015. பார்க்கப்பட்ட நாள் 28 January 2015.