சாலமாண்டர்

சாலமாண்டர்
புதைப்படிவ காலம்:
பிந்தைய யுராசிக் – அண்மை,[1] 160–0 Ma
எச்சரிக்கும் நிறத்துடன் காணப்படும் ஒரு நெருப்பு சாலமண்டர்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
லைசாம்பிபியா
வரிசை:
காடேட்டா
யூரோடிலா

சாலமாண்டர் (Salamander) (இலங்கை வழக்கு: சலமந்தர்) என்பது ஓர் இருவாழ்வி வகையைச் சேர்ந்த உயிரினம் ஆகும். நான்கு கால்களும் ஒரு வாலும் கொண்டு பார்வைக்குப் பல்லி போல இருந்தாலும் இவை பல்லிகள் அல்ல. இவற்றின் இளம் உயிரினங்கள் குடம்பிகளாக நீரில் இடப்பட்ட முட்டைகளில் இருந்து வெளிவரும். இந்த குடம்பி நிலையில் இவை செவுள்களைக் கொண்டிருக்கும்.

வளர்ந்த சாலமண்டர்கள் பெரும்பாலும் ஈரமான நிலத்திலேயே வாழும். சில சாலமண்டர்கள் நீரிலேயே தங்கும். பார்க்க வளர்ந்தவை போல் காணப்படும் இவை நியூட் (newt) என்று அழைக்கப்பெறும். சில சாலமண்டரக்ள் பாலியல் முதிர்ச்சி அடைந்த பின்னரும் செவுள்களைத் தக்க வைத்திருக்கும். இதற்கு இளம் முதுநிலை (neoteny) என்று பெயர். சாலமண்டர்கள் எதிரிகளைத் தாக்க வேதியியல் தற்காப்பு கொண்டவை. இவை உண்பதற்கு நச்சுத்தன்மை உடையவை.

தங்கள் கால்கள் மட்டுமின்றி உடலப்பாகங்களுக்கும் இழப்பு மீட்டல் திறன் பெற்றுள்ள ஒரே நான்கு கால் உயிரினம் சாலமண்டர் தான்.

மேலும் பார்க்க

தொகு
  • ஓல்ம், புரொட்டிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பல்லியின நீர்வாழ் சாலமாண்டர்

மேற்கோள்கள்

தொகு
  1. Anderson, J. S. (2012). "Fossils, molecules, divergence times, and the origin of Salamandroidea". Proceedings of the National Academy of Sciences 109 (15): 5557–5558. doi:10.1073/pnas.1202491109. பப்மெட்:22460794. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலமாண்டர்&oldid=3326351" இலிருந்து மீள்விக்கப்பட்டது