ஓல்ம் (Olm)
Proteus anguinus Postojnska Jama Slovenija.jpg
சுலோவேனியாவில் காணப்படும் ஓல்ம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: நீர்நில வாழ்வன
வரிசை: சாலமாண்டர்
குடும்பம்: புரொட்டிடே
பேரினம்: Proteus
இனம்: P. anguinus
இருசொற் பெயரீடு
Proteus anguinus

ஓல்ம் (olm, அல்லது proteus, உயிரியல் பெயர்: Proteus anguinus) என்பது புரொட்டிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பல்லியின நீர்வாழ் சாலமாண்டர் ஆகும். ஐரோப்பாவில் காணப்படும் ஒரேயொரு குகை-வாழ் முதுகுநாணி இனம் இதுவாகும். பெரும்பாலான நீர்நில-வாழ் இனங்களைப் போலல்லாது, இவை முற்றிலும் நீர்வாழ் விலங்குகள் ஆகும். உண்ணுவது, உறங்குவது, இனப்பெருக்கம் அனைத்தும் நீருக்குள்ளேயே நிகழ்த்துபவை. தெற்கு சுலோவீனியா, இத்தாலி, குரோவாசியா, பொசுனியா வரை பரந்துள்ள தினாரிக் ஆல்ப்சு குகைகளில் இவை காணப்படுகின்றன.[1]

டிராகன் என பட்டப் பெயாிட்டு அழைக்கப்படும் ஓல்ம் பல்லிகள் முழு வளா்ச்சி அடைய 15 ஆண்டுகள் ஆகும்.[2]

இந்த உயிாினத்தின் முட்டைகள் சுலோவேனியாவில் உள்ள போஸ்டோஜ்னா குகையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. சுமாா் 60 முட்டைகள் சேகாிக்கப்பட்டதி்ல் 22 முட்டைகள் குஞ்சு பொாிக்கும் நிலையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.[சான்று தேவை] தற்போது குகையில் சேகாிக்கப்பட்ட முட்டைகள் ஆய்வாளா்கள் முன்னிலையில் பாதுகாக்கப்பட்ட நிலையில் குஞ்சு பொாிக்க வைக்கப்பட்டது. ஒரு இளம் ஓல்ம் பல்லியின் பிறப்பு அகச்சிவ்பபுக்கதிா் கேமரா முலம் படமாக பதிவு செய்யப்பட்டு பொதுமக்களின் பாா்வைக்கு வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

  1. Sket, Boris (1997). "Distribution of Proteus (Amphibia: Urodela: Proteidae) and its possible explanation". Journal of Biogeography 24 (3): 263–280. doi:10.1046/j.1365-2699.1997.00103.x. 
  2. Durand, J.P.; Delay, B. (1981). "Influence of temperature on the development of Proteus anguinus (Caudata: Proteidae) and relation with its habitat in the subterranean world". Journal of Thermal Biology 6 (1): 53–57. doi:10.1016/0306-4565(81)90044-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்ம்&oldid=2228450" இருந்து மீள்விக்கப்பட்டது