ஆண்டிமனி முச்செலீனைடு
ஆண்டிமனி முச்செலீனைடு (Antimony triselenide) என்பது Sb2Se3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக இச்சேர்மம் கந்தக அணைவுக் கனிமம் ஆண்டிமோசெலைட்டு வடிவில் காணப்படுகிறது. செஞ்சாய்சதுரப் படிக இடக்குழுவில் [2] படிகமாகும் இச்சேர்மத்தில் ஆண்டிமனி 3+ ஆக்சிசனேற்ற நிலையிலும், செலீனியம் 2- ஆக்சிசனேற்ற நிலையிலும் காணப்படுகின்றன. ஆனால் உண்மையில் இச்சேர்மத்தில் பிணைப்பு உயர் சகப்பிணைப்பாக இருக்கிறது. இதனால் இச்சேர்மமும் இதனுடன் தொடர்புடைய பிறவும் கருப்பு நிறத்தால் பிரதிபலிக்கக் கூடியதாகவும் குறைகடத்திப் பண்புகளைப் பெற்றவையாகவும் காணப்படுகின்றன[3].
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஆண்டிமோன்செலீனைட்டு
செலீனாக்சியாண்டிமனி | |
இனங்காட்டிகள் | |
1315-05-5 | |
ChemSpider | 11483776 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6391662 |
| |
பண்புகள் | |
Sb2Se3 | |
வாய்ப்பாட்டு எடை | 480.4 கி/மோல் |
தோற்றம் | கருப்பு நிறப்படிகங்கள் |
அடர்த்தி | 5.81 கி/செ.மீ3, திண்மம் |
உருகுநிலை | 611 °C (1,132 °F; 884 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம், oP20, இடக்குழு = Pnma, No. 62 |
தீங்குகள் | |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 0.5 மி.கி/மீ3 (Sb ஆக)[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 0.5 மி.கி/மீ3 (Sb ஆக)[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஆண்டிமனி(III) ஆக்சைடு, ஆண்டிமனி(III) சல்பைடு, ஆண்டிமனி(III) தெலூரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | ஆர்சனிக்(III) செலீனைடு, பிசுமத்(III) செலீனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆண்டிமனியும் செலீனியமும் வினைபுரிவதால் ஆண்டிமனி முச்செலீனைடு உருவாகிறது.
பயன்பாடு
தொகுமெல்லிய ஏடு சூரிய மின்கலங்களில் பயன்படுத்துவதற்கு Sb2Se3 தற்போது தீவிரமாக ஆராயப்படுகிறது. வெற்றிகரமாக 5.6% செயல்திறன் சான்றிதழும் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0036". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Jambor, J. L.; Grew, E. S."New Mineral Names" American Mineralogist, Volume 79, pages 387-391, 1994.
- ↑ Caracas, R.; Gonze, X. "First-principles study of the electronic properties of A2B3 minerals,, with A=Bi,Sb and B=S,Se, Note: Hypothetical sulphosalt structure derived from density functional theory"" Physics and Chemistry of Minerals 2005, volume 32 p.295-300.