ஆண்டிலோகசு

ஆண்டிலோகசு
ஆண்டிலோகசு கான்குமெர்டீ, ஹாங்காங்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கெமீப்பிடிரா
குடும்பம்:
பைரஹோகோரிடே
பேரினம்:
ஆண்டிலோகசு

இசுடால் 1863[1]

ஆண்டிலோகசு (Antilochus) என்பது பழைய உலக பேரினமாகும். இவை பூச்சிகளில் பைரஹோகோரிடே குடும்பத்தினைச் சார்ந்தவை. மடகாஸ்கர், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, மலாய் தீவுக்கூட்டம் மற்றும் நியூ கினியா உள்ளிட்ட வெப்பமண்டல ஆப்பிரிக்காவில் தற்போது சுமார் 25 சிற்றினங்கள் உள்ளன.[2] ஆன்டிலோகசு பேரினப் பூச்சிகள் பிரகாசமான நிறமுடையது, பொதுவாகச் சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் காணப்படும். இவற்றை மற்ற பைரோகோரைட்களிலிருந்து தலையின் மூலம் எளிதில் வேறுபடுத்தி அறியலாம். இந்தப் பேரினப்பூச்சிகளில் கண்களின் பின்பகுதி நீளவாக்கில் அழுந்திக் காணப்படும். இவை பெரும்பாலும் லைகாயிடே குடும்பத்தில் உள்ள பூச்சிகளுடன் அடையாங்காணுவதில் குழப்பங்கள் உள்ளன. ஆனால் தலையில் தனித்த கண்கள் இல்லாததால் வேறுபடுகின்றன. பல்வேறு வகையான பைரோகோரைட் போலல்லாமல் ஆண்டிலோகசு பேரினம் கொன்றுண்ணி வகையினைச் சார்ந்தவை; பிற பேரினங்கள் தாவர உண்ணியாகும்[3].

மேற்கோள்கள்

தொகு
  1. STÅLC. 1863: Beitrag zur Kenntnis der Pyrrhocoriden. Berliner Entomologische Zeitschrift7:390–404
  2. http://www.ammbiol.com/fileadmin/user_upload/07Stehlik_AmmSB94_1-2.pdf
  3. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S1226861517306143
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிலோகசு&oldid=3129466" இலிருந்து மீள்விக்கப்பட்டது