ஆண்ட்ரி ராசொய்லினா

மடகாசுகரின் ஜனாதிபதி (2009-2014; 2019-தற்போது)

ஆண்ட்ரி நிரினா ராசொய்லினா (Andry Nirina Rajoelina, ஆண்ட்ரி நிரினா ராஜொய்லினா, பிறப்பு: 1975) மடகாசுகர் அரசியல்வாதி. மார்ச் 2009 இல் நாட்டில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மக்கள் எழுச்சி, மற்றும் இராணுவப் புரட்சியை அடுத்து இவர் நாட்டின் குடியரசுத் தலைவராக 2009, மார்ச் 17 இல் இராணுவத் தலைமையினால் அறிவிக்கப்பட்டார். இவர் டிசம்பர் 2007 முதல் பெப்ரவரி 2009 வரை தலைநகர் அண்டனானரீவோவின் என்ற பகுதியின் நகரத் தந்தையாக இருந்தவர். இவரது பதவியை முன்னாள் சனாதிபதி மார்க் ரவலோமனானா பறித்ததைத் தொடர்ந்தே நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.

ஆண்ட்ரி ராசொய்லினா
Andry Rajoelina
மடகாசுகர் குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 மார்ச் 2009
பிரதமர்மொஞ்சா ரொயிண்டிஃபோ
முன்னையவர்மார்க் ரவலோமனானா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1975
அண்டனானரீவோ, மடகாசுகர்
துணைவர்மியாலி ராசொய்லினா
தொழில்தொழிலதிபர்
Disc Jockey
சமயம்ரோமன் கத்தோலிக்கம்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

ராசொய்லினா 1994 முதல் 2000 வரை நகரில் களியாட்ட விழாக்களை நடாத்தும் தொழிலை மேற்கொண்டிருந்தார். தொலைக்காட்சி, மற்றும் வானொலி நிலையங்களையும் இவர் நடத்தி வருகிறார். டிசம்பர் 2007 இல் இவர் தலைநகர் அண்டனானரீவோவின் மேயராக 63.3 விழுக்காடு வாக்குகளினால் தெரிவானார்.

2009 புரட்சி

தொகு

டிசம்பர் 2008 இல் இவரது வைவா என்ற தொலைக்காட்சியில் முன்னாள் அதிபர் ஒருவரின் நேர்காணலை ஒளிபரப்பியதற்காக இத்தொலைக்காட்சி நிறுவனத்தை மூட சனாதிபதி உத்தரவிட்டார். இந்நடவடிக்கையை எல்லைகளற்ற செய்தியாளர்கள் கண்டித்து அறிக்கை விட்டிருந்தார்கள்[1].

சனவரி 31, 2009 இல் ராசொய்லினா முழு மலகாசிக் குடியரசுக்கும் தானே தலைவர் என ஒருதலைப்பட்சமாக அறிவித்தார். அத்துடன் சனாதிபதி தனது பதவியை விட்டு விலக வேண்டும் எனவும் அறிவித்தார்[2]. பெப்ரவரி 3 இல் ராசொய்லினா மேயர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இதனை ராசொய்லினா ஏற்க மறுத்து விட்டார்[3].

இதைத் தொடர்ந்து நாட்டில் வன்முறைகள் தலைதூக்கின. பெப்ரவரி மாதத்திலிருந்து அங்கு நடைபெற்றுவரும் வன்முறைகளில் குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை, கொள்ளைச் சம்பவங்களும் பெருமளவில் இடம்பெற்றன. இந்நிலையில், தலைநகரின் மத்தியிலுள்ள ஜனாதிபதி மாளிகையும் மத்திய வங்கியையும் கிளர்ச்சிப் படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குடியரசுத் தலைவராதல்

தொகு

நாட்டில் இடம்பெற்ற பெரும் கிளர்ச்சியை அடுத்து சனாதிபதி மார்க் ரவலோமனானா தாம் பதவி விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனையடுத்து ராசொய்லினாவை ஆட்சி அமைக்குமாறு இராணுவம் கேட்டுக் கொண்டதை அடுத்து ராசொய்லினா மார்ச் 18 ஆம் நாளன்று குடியரசுத் தலைவரானார். இவர் 2011 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப் படும் வரையில் நாட்டின் குடியரசுத் தலைவராகப் பதவியில் இருப்பார் என இராணுவம் அறிவித்தது. ஜூன் 2023 இல், பிரெஞ்சு குடியுரிமையின் வெளிப்பாடு பாராளுமன்ற விசாரணையைத் தொடங்க வழிவகுத்தது, அதைத் தொடர்ந்து பிரான்சில் உள்ள மலகாசி புலம்பெயர்ந்த குடிமக்கள் குழு உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தை கேள்விக்குள்ளாக்கியது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ரி_ராசொய்லினா&oldid=3926513" இலிருந்து மீள்விக்கப்பட்டது