ஆதித்யா ராய் கபூர்

ஆதித்யா ராய் கபூர், இந்தி திரைப்பட நடிகர். ஆஷிக்கி 2 என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் புகழ் அடைந்தார்.

ஆதித்யா ராய் கபூர்
2013 இல் ஆதித்யா ராய் கபூர்.
அக்டோபர், 2013 ’பிளாக்பெரி இரவு’ நிகழ்ச்சியில் ஆதித்யா ராய் கபூர்.
பிறப்புஆதித்யா ராய் கபூர்.
16 நவம்பர் 1985 (1985-11-16) (அகவை 38)[1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிதிரைப்பட நடிகர்
முன்னாள் விஜே
செயற்பாட்டுக்
காலம்
2009 – நடப்பு
உறவினர்கள்
  • சித்தார்த் ராய் கபூர் (சகோதரர்)
  • குணால் ராய் கபூர் (சகோதரர்)
  • வித்யா பாலன் (அண்ணி)

இளம்பருவம்

தொகு

ஆதித்யா ராய் மும்பையில் பிறந்தவர். இவரது தந்தை பஞ்சாபி இனத்தைச் சேர்ந்தவர். இவரது தாய் யூத இனத்தைச் சேர்ந்தவர்[2]. இவரது உறவினர் பலர் திரைத்துறையில் பணியாற்றுகின்றனர். தொடக்கத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து[3], பின்னர், திரைப்பட நடிகர் ஆனவா்.

திரைத்துறையில்

தொகு

ஆதித்யா, சேனல் வி என்ற தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பேச்சுத் திறமையால் புகழ் பெற்றவர். குசாரிஷ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். 2013இல் வெளியான ஆஷிக்கி 2 என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் பாடகராக நடித்திருந்தார். இந்த படம் அதிக வசூலைப் பெற்று, புகழ் சேர்த்தது. இதற்கு முன்னர் சில திரைப்படங்களில் நடித்திருந்த போதும், இதுவே இவரது முதல் வெற்றித் திரைப்படமாக விளங்கியது[4]. பின்னர், யே ஜவானி ஹே திவானி என்ற திரைப்படத்தில், தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர் உள்ளிட்டோருடன் நடித்திருந்தார். தமிழில் வெளியான் நீ தானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படம், இந்தியில் வெளியாக உள்ளது. இதில் சமந்தாவுக்கு இணையாக நடித்துள்ளார்[5][6][7].

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2009 லண்டன் டிரீம்ஸ் வாசிம் கான்
2010 ஆக்சன் ரீப்ளே பன்டி
2011 குசாரிஷ் ஒமர் சித்திக்
2013 ஆஷிக்கி 2 ராகுல் ஜய்கர்
2013 யே ஜவானி ஹை திவானி அவினாஷ் அரோரா

விருதுகள்

தொகு
  • பிக் ஸ்டார் என்டெர்டெயின்மென்ட் விருது-சிறந்த நடிகர்-ஆஷிக்கி 2

சான்றுகள்

தொகு
  1. "Birthday Exclusive: Aditya Roy Kapur". Deccan Chronicle. 26 November 2013. http://www.deccanchronicle.com/131116/entertainment-bollywood/gallery/birthday-exclusive-aditya-roy-kapur. பார்த்த நாள்: 12 February 2014. 
  2. "Shraddha and I are really, really close: Aditya Roy Kapur". The Times of India. 26 May 2013. Archived from the original on 19 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "New Kid on the Block: Aditya Roy Kapur". Star Box Office. Archived from the original on 2012-03-17. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
  4. "Aashiqui 2 Is BLOCKBUSTER: Heads For 70 Crore Plus Business". Box Office India. Archived from the original on 20 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 29 June 2013.
  5. Jha, Subhash K. "Aditya Roy Kapur's Assi Nabbe Poore Sau to be revived". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 29 June 2013.
  6. "I can retire now!: Jokes VJ-turned-actor Aditya Roy Kapoor as he has now acted in two films with Aishwarya Rai". MiD DAY. 29 October 2010. http://www.mid-day.com/entertainment/2010/oct/281010-VJ-Aditya-Kapoor-Aishwarya-Rai-Action-Replayy-Guzaarish.htm. 
  7. "Big Gains". இந்தியன் எக்சுபிரசு. 31 October 2010 இம் மூலத்தில் இருந்து 10 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121010222900/http://www.expressindia.com/latest-news/big-gains/704968/. 

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்யா_ராய்_கபூர்&oldid=3574799" இலிருந்து மீள்விக்கப்பட்டது