நீ தானே என் பொன்வசந்தம் (திரைப்படம்)
நீ தானே என் பொன்வசந்தம் என்பது 2012ஆம் ஆண்டு வெளியான ஓர் இசை[2] - காதல் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம், ஒரே நேரத்தில் வெவ்வேறு நடிகர்களைக் கொண்டு தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகி உள்ளது. கௌதம் மேனன் எழுதி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் ஜீவா, சமந்தா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.[3]
நீ தானே என் பொன்வசந்தம் | |
---|---|
![]() முன்-தயாரிப்பு விளம்பரச் சுவரொட்டி | |
இயக்கம் | கௌதம் மேனன் |
தயாரிப்பு | குமார் ஜெயராம் |
கதை | கௌதம் மேனன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ஜீவா சமந்தா |
ஒளிப்பதிவு | எம். எஸ். பிரபு |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | ஃபோட்டான் கதாஸ் ஆர். எசு. இன்போடெயின்மென்ட் |
வெளியீடு | பெப்ரவரி 14, 2012[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுசிறு வயதிலிருந்தே வருணும் (ஜீவா), நித்யாவும் (சமந்தா) நண்பர்களாக இருக்கின்றனர். பிறகு சிறு பிரச்சினையில் இருவரும் சண்டையிட்டு பிரிகிறார்கள். மீண்டும் பள்ளியில் படிக்கும்போது ஒரே தனிப்பயிற்சிக் கூடத்தில் படிக்கின்றனர். பழைய பகையை மறந்து மீண்டும் நட்பாக பழகுகின்றனர். இந்த நட்பு சிறிதுகாலம் வரை தொடர்கிறது. அதன்பின் மீண்டும் பிரிகின்றனர்.
அதன்பிறகு தொடர்பே இல்லாமல் இருக்கும் இவர்கள் இருவரும் பல கல்லூரிகள் பங்கேற்கும் விழாவில் நேரிடையாக சந்திக்கின்றனர். அப்போது, தங்களுடைய பகையை மறந்து நெருக்கமாக பழகுகின்றனர். இதனால் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. கல்லூரி முடிந்து வெளிவந்த பின்பும் தொடர்ந்து காதலிக்கிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுக்குள் மீண்டும் பிரச்சினைகள் வர சண்டைபோட்டு பிரிகிறார்கள்.
பல வருடங்கள் கழித்து, தனது காதலியான நித்யாவைப் பார்க்க ஒரு கடலோரக் கிராமத்திற்கு வருண் வருகிறார். அங்கு இருக்கும் நித்யாவைச் சந்திப்பதற்காக சில நாட்கள் அங்கேயே தங்கிவிடுகிறார். நித்யாவைச் சந்தித்து பேசும்போது, மீண்டும் இருவருக்கும் சண்டை வருகிறது. அதனால், மறுபடியும் பிரிந்து செல்கிறார்கள்.
சில மாதங்கள் கழித்து சென்னையில் மீண்டும் சந்திக்கின்றனர். வருண் தன்னுடைய திருமணத்தை பழைய காதலியான நித்யாவுக்காக நிறுத்துகிறார். இருவரும் இணைகின்றனர்.
நடிகர்கள்
தொகு- ஜீவா - வருண் கிருஷ்ணன்
- சமந்தா ருத் பிரபு - நித்யா வாசுதேவன்
- சந்தானம் - பிரகாஷ்
- வித்யுலேகா ராமன் - ஜெனி
- ரவி பிரகாஷ் - ஹரீஸ்
- ரவி ராகவேந்திரா - கிருஷ்ணன்
- சிறீரஞ்சனி - நித்தியாவின் அம்மா
- அனுபமா குமார் - வருணீன் அம்மா
- வித்யா வாசுதேவனாக கிறிஸ்டின் தம்புசாமி
- தீபக்காக அபிலாஷ் பாபு
- அபிஷேக் ஜெயின்
- அர்ஜுன் ராஜ்குமார்
- வருணின் நண்பனாக ராஜ்குமார் பிச்சுமணி
- ராதிகாவாக அஸ்வதி ரவிக்குமார்
- தன்யா பாலகிருஷ்ணா நித்யாவின் நண்பராக
- கவிதா சீனிவாசன்
- கோட்டா பிரசாந்த்
- ப்ரீத்தி ராஜேந்திரன்
- ராஜேஷ் டிராக்கியா
- சாஹித்தியா ஜெகன்னாதன் நித்யாவின் நண்பராக
- ஸ்ரியா சர்மா காவ்யா வாசுதேவனாக
- ஸ்வேதா சேகர்
- வைத்தியநாதன்
- வெட்ரி
- விவேக் பதக்
- நானிஒரு ரயில் பயணிகளாக ("காத்ராய் கொஞ்சம்" சிறப்புத் தோற்றம் )
- விடிவி கணேஷ் கணேஷ் (சிறப்புத் தோற்றம் )
- சதீஷ் கிருஷ்ணன் வித்யாவின் திருமணத்தில் நடனக் கலைஞராக (சிறப்புத் தோற்றம்)
- குஷி ஜெயின் (இளம் நித்யா)
- மானவ் (இளம் வருண்)
- சரண் (இளம் ஹரிஷ்)
இசை
தொகுமுதல் முறையாக கௌதம் இளையாராஜாவுடன் இப்படத்தில் பணியாற்றினார்.[4] பாடல் மற்றும் பிண்ணினி இசை பதிவு இலண்டனில் உள்ள ஏஞ்சல் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் 108 இசைக் கருவிகளுடன் பதிவு செய்யப்பட்டது.[5] அனைத்துப் பாடல்களையும் நா. முத்துக்குமார் எழுதினார். பாடல் உரிமைகளைத் தயாரிப்பு நிறுவனம் ₹20 மில்லியன் (ஐஅ$2,30,000) ரூபாய்க்கு சோனி மியூசிக் நிறுவனத்திற்கு விற்றது.[6][7]
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் நா. முத்துக்குமார்.
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "காற்றைக் கொஞ்சம்" | கார்த்திக் | 5:34 | |
2. | "புடிக்கல மாமே" | சுராஜ் ஜகன், கார்த்திக் | 6:00 | |
3. | "என்னோடு வா வா" | கார்த்திக் | 4:19 | |
4. | "சாய்ந்து சாய்ந்து" | யுவன் சங்கர் ராஜா, ரம்யா என்.எஸ்.கே. | 6:07 | |
5. | "பெண்கள் என்றால்" | யுவன் சங்கர் ராஜா | 4:06 | |
6. | "முதல் முறை" | சுனிதி சௌஹான் | 3:55 | |
7. | "சற்று முன்பு" | ரம்யா என்எஸ்கே | 5:57 | |
8. | "வானம் மெல்ல" | இளையராஜா, பெலா சென்டே | 6:02 | |
மொத்த நீளம்: |
42:00 |
வரவேற்பு
தொகுஇத்திரைப்படம் பல்வேறு மாறுபட்ட வரவேற்பை பெற்றுள்ளது. அதிகப்படியாக 8 பாடல்களுடன், நினைவெல்லாம் நித்யா திரைப்படத்தில் வரும் பழைய பாடலான "நீ தானே என் பொன் வசந்தம்" என்ற பாடலும் இத்திரைப்படத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்
தொகு- ↑ "'Neethane En Ponvasantham' - A Valentines Day special - Tamil Movie News". IndiaGlitz. Retrieved 2011-09-16.
- ↑ "நீதானே என் பொன் வசந்தம் - விமர்சனம்". Retrieved டிசம்பர் 16, 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "'நீ தானே என் பொன்வசந்தம்' - முதல் பார்வை - தமிழ் திரைப்பட செய்திகள்". இந்தியா-கிளிட்ஸ். 2005-08-31. Archived from the original on 2011-10-09. Retrieved 2011-09-05.
- ↑ "Why Gautham took on Raja!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 August 2012. Archived from the original on 3 January 2013. Retrieved 2012-09-28.
- ↑ "Ilayaraja records with London based orchestra for Tamil film". Firstpost. 30 March 2012. http://www.firstpost.com/photos/ilayaraja-records-with-london-based-orchestra-for-tamil-film-261645.html. பார்த்த நாள்: 12 August 2012.
- ↑ "Sony Music acquires Neethane Enn Ponvasantham". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 June 2012 இம் மூலத்தில் இருந்து 4 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130104025413/http://articles.timesofindia.indiatimes.com/2012-06-12/news-interviews/32193903_1_sony-music-audio-rights-santhanam. பார்த்த நாள்: 17 June 2012.
- ↑ "2 crore for NEP audio rights!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 May 2012. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/2-crore-for-NEP-audio-rights/articleshow/13065333.cms. பார்த்த நாள்: 10 May 2012.