ஆத்திரேலிய ஆங்கிலம்

ஆத்திரேலிய ஆங்கிலம் (Australian English, AuE, AusE, en-AU) என்பது ஆத்திரேலியாவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழியைக் குறிக்கும்.

வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசும் மக்களின் சதவீதம், 2021

ஆத்திரேலியாவில் ஆங்கில மொழியானது 1788 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்சில் (நிசவே) பிரித்தானியக் குற்றவாளிகளின் காலனி நிறுவப்பட்டதில் இருந்து சிறிது காலத்திலேயே பிரித்தானிய ஆங்கிலத்தில் இருந்து வேறுபட ஆரம்பித்தது. இங்கு அனுப்பப்பட்ட பிரித்தானியக் குற்றவாளிகள், லண்டனில் இருந்து கொக்னிகள் உட்படப், பலர் இங்கிலாந்தின் பல்வேறு பெரு நகரங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன், நிருவாகிகள், இராணுவத்தினர், போன்றோர் தமது குடும்பத்தினருடன் வந்து இணைந்தனர். ஆனாலும், குற்றவாளிகளின் பெரும்பகுதியினர் ஐரியர்கள் ஆவார். இவர்களில் குறைந்தது 25 விழுக்காட்டினர் அயர்லாந்தில் இருந்தும், வேறு பலர் ஆங்கிலம் பேசாத வேல்ஸ், ஸ்கொட்லாந்து ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள். பெரும்பாலான குற்றவாளிகள் ஆங்கிலத்தைப் பேசாதவர்கள் ஆவர். ஆங்கிலம் பேசுவோரின் பெரும்பாலானோர் தென்கிழக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த கொக்னிகள் ஆவர். 72% மக்கள் வீட்டில் இம்மொழியினைப் பேசுகின்றனர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "2021 Australia, Census All persons QuickStats | Australian Bureau of Statistics".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்திரேலிய_ஆங்கிலம்&oldid=4083564" இலிருந்து மீள்விக்கப்பட்டது