ஆத்மாராம்
முனைவர் ஆத்மாராம் (Dr. Atmaram) என்பவர் ஓர் இந்திய அறிவியலாளர் ஆவார். [1] உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிச்னோர் மாவட்டம் சந்த்பூர் நகரத்திலுள்ள பிலானா கிராமத்தில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் நாள் லாலா பகவந்தாசு என்பவருக்கு ஆத்மாராம் மகனாகப் பிறந்தார். இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுபாட்டிலுள்ள மத்திய இந்தி நிறுவனம் இவரது நினைவாக ஆத்மாராம் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றிய ஆத்மாராம் 1966 ஆம் ஆண்டு ஆகத்து 21 ஆம் நாள் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் பொது இயக்குநர் பதவியை ஏற்றுக்கொண்டார். [2][3] 1977 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை பிரதமர் மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரவையின் முதன்மை ஆலோசகராகவும் ஆத்மாராம் இருந்தார்.[2][4]
முனைவர் ஆத்மாராம் Dr. Atataram | |
---|---|
பிறப்பு | 12 அக்டோபர் 1908 |
இறப்பு | 6 பெப்ரவரி 1983 தில்லி, இந்தியா | (அகவை 74)
வாழிடம் | இந்தியா |
தேசியம் | இந்தியன் |
துறை | வேதியியல் |
பணியிடங்கள் | மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் |
விருதுகள் | பத்மசிறீ (1959) |
1959 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் ஆத்மாராமின் அறிவியல் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ விருதை]] இவருக்கு வழங்கியது. [5]
1983 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் நாளில் இவர் காலமானார்.
கல்வி
தொகுகான்பூரில் இளம் அறிவியல் பட்டமும் பட்டமேற்படிப்பையும் முனைவர் பட்டத்தையும் அலகாபாத்திலும் ஆத்மாராம் நிறைவு செய்தார்.
விருதுகள்
தொகு1959 ஆம் ஆண்டு ஆத்மாராமுக்கு [[சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது|சாந்தி சுவரூப் பட்நாகர் விருதும் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டன. 1964 ஆம் ஆண்டு அனைத்திந்திய கண்ணாடி தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் கௌரவ விருது இவருக்கு வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Mukesh ‘Nadaan’ (2018). Vishwa Vyakti Kosh. Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788177213232.
- ↑ 2.0 2.1 "Atma Ram". cgcri.res.in. Archived from the original on 30 June 2016. பார்க்கப்பட்ட நாள் 26 December 2018.
- ↑ "Medal Lectures, 1950-1983: A Collection of Lectures Delivered by Eminent Men of Science who Have Been Recipients of Various Medals and Honours from the Academy, Volume 1". இந்திய தேசிய அறிவியல் கழகம்: 573. 1984. https://books.google.com/books?id=Rs-4AAAAIAAJ&q=Atmaram+1959+Padma+Shri&dq=Atmaram+1959+Padma+Shri&hl=en&sa=X&ved=0ahUKEwjfq9SYlcLfAhUTWysKHQiIBJYQ6AEILzAB.
- ↑ "इतिहास: अर्थपरक वैज्ञानिक प्रौद्योगिकी के पक्षधर थे डॉ. आत्माराम!" (in Hindi). Sanjeevni Today. 6 February 2017 இம் மூலத்தில் இருந்து 12 ஜூலை 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200712010433/https://www.sanjeevnitoday.com/national/History--Dr--favored-Arthprk-scientific-technology-Atma-Ram/06-02-2017/86243.
- ↑ "Padma Shri Awaardee". Archived from the original on 2020-07-13. பார்க்கப்பட்ட நாள் 2020-07-12.