ஆத்வே
ஆத்வே கேபிள் & டாட்டாகொம் லிமிடெட் (Hathway Cable & Datacom Ltd, தேபச: HATHWAY , முபச: 533162 ) இந்தியாவில் மும்பையிலிருந்து இயங்கும் ஓர் முதன்மை கம்பிவடத் தொலைக்காட்சி சேவை வழங்குனர் ஆகும்.[1] ஐதராபாத், மும்பை, புனே, பெங்களூரு இந்தூர் உட்பட இந்தியாவின் பல நகரங்களில் தனது சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவில் கம்பிவடத் தொலைக்காட்சிக்கான கம்பிவடம் வழியே அகலப்பட்டை இணைய அணுக்கமும் வழங்கத் தொடங்கிய முதல் நிறுவனம் ஆத்வே ஆகும். திவ்ய பாசுகர் நிறுவனத்தின் பாசுகர் மல்டிநெட் சேவையிலும் குசராத் டெலிலிங்கசு நிறுவனத்திலும் 51% பங்கு ஆத்வேக்கு உள்ளது. 2006ஆம் ஆண்டில் கம்பிவடத் தொலைகாட்சி சேவைகளை எண்ணிம வடிவத்தில் வழங்கத் தொடங்கியது.[2] தனது சேவையில் உயர் வரையறு தொலைக்காட்சி அலைவரிசைகளையும் எண்ணிம ஒளிதப் பதிவுகருவியையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
![]() | |
வகை | பொது |
---|---|
தலைமையகம் | மும்பை, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முக்கிய நபர்கள் | பாரத் ஷா (தலைவர்) கே. ஜெயராமன் (மே.இ & சிஈஓ) |
தொழில்துறை | தொலைதொடர்பு ஒளிபரப்பு |
உற்பத்திகள் | கம்பிவடத் தொலைக்காட்சி, அகலப்பட்டை இணையம், எண்ணிமக் குரல், வீட்டுப் பிணையம் |
இணையத்தளம் | www |