ஆந்திரப்பிரதேச மத்தியப் பல்கலைக்கழகம்
ஆந்திரப் பிரதேச மத்தியப் பல்கலைக்கழகம் (Central University of Andhra Pradesh (CUAP) இந்தியாவின் 54 மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 2018-ஆம் ஆண்டில் பொதுப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்ட இது ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் நகர்புறத்தில் அமைந்துள்ளது.
ஆந்திரப்பிரதேச மத்தியப் பல்கலைக்கழகம் | |
குறிக்கோளுரை | Vidya Dadati Vinayam |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | கல்வி பணிவு தரும் |
வகை | மத்தியப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 2018 |
துணை வேந்தர் | எஸ். ஏ. கோரி |
அமைவிடம் | , , இந்தியா 14°45′08.70″N 77°39′08.28″E / 14.7524167°N 77.6523000°E |
வளாகம் | நகர்புறம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
இணையதளம் | cuap |
வழங்கும் படிப்புகள்
தொகுஇந்த மத்தியப் பல்கலைகழகம் கீழ்கண்ட படிப்புகளை வழங்குகிறது. [1]
- இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் (ஹானர்ஸ்) பட்டம்.
- இளநிலை (பி. ஏ) - (தொழில் படிப்புகள்)
- முதுநிலை (எம்.ஏ) - மொழிப் படிப்புகள்
மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள், 2022
தொகு2020 தேசியக் கல்விக் கொள்கையின்படி 2022 - 2023 கல்வி ஆண்டிலிருந்து மத்தியப் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலம் இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்கை நடத்தப்படுகிறது.[2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Programmes". Central University of Andhra Pradesh. Archived from the original on 18 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 21 November 2019.
- ↑ CUET in July for UG admissions to central universities, Class 12 marks won’t count