தேசியத் தேர்வு முகமை

இந்திய அரசு முகமை


தேசிய தேர்வு முகமை (National Testing Agency) (NTA) இந்திய அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டு, நவம்பர் 2017இல் நிறுவப்பட்டது. இதன் முதன்மைப் பணி இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மை கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதே.[1][2] இந்திய அரசு விநீத் ஜோஷி என்பவரை இம்முகமையின் முதல் இயக்குநராக நியமித்துள்ளது.

தேசியத் தேர்வு முகமை
National Testing Agency
சுருக்கம்NTA
குறிக்கோள் உரைமதிப்பீட்டில் சிறந்து விளங்குதல்
Excellence in Assessment
சட்ட நிலைசெயல்படுகிறது
நோக்கம்இந்தியா முழுவதும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நடத்துதல்
வலைத்தளம்http://nta.ac.in/

நடத்தும் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகள்தொகு

உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்க்க தேசிய தேர்வு முகமை, இந்திய தேசிய அளவில் கீழ்கானும் தேர்வுகளை நடத்துகிறது. [3]

வரலாறுதொகு

1992 முதல் இந்திய தேசிய அளவிலான தொழில்நுட்பம், மருத்துவம் மேலாண்மை மற்றும் இதர உயர் கல்விப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் போன்ற நிறுவனங்கள் நடத்தியது.[4] 2010-இல் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிறுவிய வல்லுனர் குழுவின் அறிக்கையில், உயர் கல்வி நிறுவனாங்களில் மாணவர்களை சேர்க்க, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மற்றும் தகுதித் தேர்வுகளை நடத்துவதற்கு சட்ட அங்கீகாரம் பெற்ற தனி நிறுவனம் அமைக்கப் பரிந்துரைத்தது.[5]


2017-இல் இந்திய அமைச்சரவை தேசிய தேர்வு முகமைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அமைக்கப்பட்டது.[6] 2017-ஆம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை உயர் கல்வி நிலையங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு தகுதித் தேர்வுகளும், நுழைவுத்தேர்வுகளை நடத்துகிறது.[7]

முகமையின் உறுப்பினர்கள்தொகு

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முகமையின் தலைவரை நியமிக்கும். முகமையின் தலைவருக்கு ஆலோசனை வழங்க 9 கல்வியாளர்களைக் கொண்ட ஆளுநர் குழு உள்ளது. மேலும் முகமையின் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள தலைமை நிர்வாக அலுவலரே தலைமை இயக்குநராக செயல்படுவார். [8]

மேற்கொள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசியத்_தேர்வு_முகமை&oldid=3190291" இருந்து மீள்விக்கப்பட்டது