நீட் தேர்வு (முதுநிலை மருத்துவம்)

தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility Entrance Test (Postgraduate) (அல்லது NEET (PG)) இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகள் (MD/MS/PG Diploma Courses) படிப்பதற்கு இந்த தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியத்தால் அகில இந்திய அளவில் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்வில் தேறியவர்களுக்கு ஆலோசனை மற்றும் படிக்கும் கல்லூரி ஒதுக்கீடு இந்திய அரசின் சுகாதரப் பணிகளின் தலைமை இயக்குநர் வழங்குவார். இத்தேர்வுகள் 2013-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. [1]

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு
National Eligibility Entrance Test (Postgraduate)
சுருக்கம்NEET (PG)
வகைஇணைய வழித் தேர்வு
நிருவாகிதேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம்
மதிப்பிடப்பட்ட திறமைSubjects as per the Graduate Medical Education Regulations
நோக்கம்இந்திய மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளில் சேர்வதற்கு
ஆரம்பிக்கப்பட்ட வருடம்2013
காலம்210 நிமிடங்கள்
தர அளவு-300 முதல் +1200 வரை
தர பெறுமதி1 ஆண்டு
கொடுப்பனவுஆண்டிற்கு ஒரு முறை
நாடுஇந்தியா
மொழி(கள்)ஆங்கிலம்
வருடாந்த தேர்வுக்கு தேற்றுவோர்Increase 160,888
தேர்வு முறைMBBS degree as per Indian Medical Council Act
கட்டணம்பொதுப்பிரிவினர்/இதர பிற்படுத்த வகுப்பினருக்கு ₹370
பட்டியல் இனத்தவருக்கும்/மாற்றுத் திறனாளிகளுக்கும் ₹2750
தரம் பாவிக்கப்படுவதுAFMS and ESI Institutions, Medical Educational Institutions of Central and State Govts
வலைத்தளம்nbe.edu.in
As per 2020 information bulletin

இத்தேர்வுக்கு உட்படாத மருத்துவக் கல்லூரிகள்

தொகு

நீட் தேர்வு உட்படாத கீழ்கண்ட 5 பட்டமேற்படிப்பு மருத்துவக் கல்லூரிகள்:

  1. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் (AIIMSs)
  2. பட்டமேற்படிப்பு மருத்துவம் மற்றும் ஆய்வு நிறுவனம், சண்டிகர் (Postgraduate Institute of Medical Education and Research)
  3. ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER)
  4. தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (NIMHANS), பெங்களூரு
  5. சிறீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம் (SCTIMST)

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "AIPGMEE 2018: Registration, Merit List, Counselling, Admission". SarvGyan. 2018-03-05. பார்க்கப்பட்ட நாள் 2020-08-15.

வெளி இணைப்புகள்

தொகு