ஆந்திரியா கியேசு
ஆந்திரியா மியா கியேசு (Andrea Mia Ghez, பிறப்பு: சூன் 16, 1965) அமெரிக்க வானியலாளரும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வானியல் துறைப் பேராசிரியரும் ஆவார். பால்வழி அண்டத்தின் மையம் பற்றிய ஆய்வுகளுக்காக இவர் அறியப்படுகிறார்.[2] இவர் 2004 இல் அமெரிக்காவில் தம் புலங்களில் நல்ல புரிதல் வாய்ந்த தலைசிறந்த 20 அறிவியலாளர்களில் ஒருவராக டிசுகவர் இதழால் அறிவிக்கப்பட்டார்.[2] 2020 இல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[3] இப்பரிசின் அரைப்பங்கு இரைனாடு கென்செல்லுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. மற்றைய அரைப்பங்கு உரோசர் பென்ரோசுக்கு வழங்கப்பட்டது. இயற்பியல் நோபல் பரிசினைப் பெறும் நான்காவது பெண் இவராவார். நம் பால்வழியின் விண்மீன் பேரடையின் நடுவே கருந்துளை எனப் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மீப்பெரும் இறுக்கமான பொருளைக் கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.[4][5]
ஆந்திரியா எம். கியேசு Andrea M. Ghez | |
---|---|
பிறப்பு | சூன் 16, 1965 நியூயார்க்கு நகரம், அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) |
கல்வி கற்ற இடங்கள் | மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் (B.S. இயற்பியல், 1987) கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் (Ph.D., 1992) |
அறியப்படுவது | பால்வெளி மைய ஆய்வில் தகவைந்த ஒளியியலைப் பயன்படுத்தல்[1] |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (2020) |
இளமை
தொகுசிகாகோவில் பிறந்து வளர்ந்த ஆந்திரியா கியேசு, முதலில் பாலே நடனக்காரியாக விரும்பினார். அப்பொல்லோ திட்டத்தில் நிலாவில் மாந்தர் இறங்கிய காட்சி, இவருக்குத் தான் முதல் விண்வெளி வீராங்கனையாகத் திகழவேண்டும் எனும் ஆசையைத் தூண்டிவிட்டுள்ளது. இவரது தாயும் இந்த இலக்கை விரும்பி ஆதரவு தந்துள்ளார். இவரது முற்காட்டு பெண்மணியாக இவரது பள்ளி வேதியியல் ஆசிரியை விளங்கியுள்ளார்.[6] இவர் கல்லூரியில் முதலில் கணிதம் பயிலத் தொடங்கினாலும் பின்னர் இயற்பியலுக்கு மாறியுள்ளார்.[7] இவர் இயற்பியலில் இளமறிவியல் பட்டத்தை 1987 இல் மசாசூசட் தொழில்நுட்பக் கழகத்திலும் முனைவர் பட்டத்தை கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் 1992 இல் ஜெரி நியூகேபாவுவேர் கீழும் பெற்றுள்ளார்.[8]
வாழ்க்கைப்பணி
தொகுசொந்த வாழ்க்கை
தொகுஆந்திரியா கியேசு புவியியலாளரும் இரேண்டு குழுமத்தில் ஆய்வாளருமான தாம்-லா தவுரெத்தியை மணந்துகொண்டார். இவர் களுக்கு இரு ஆண்மகவுகள் உண்டு. எவான் 2001 இலும் மைல்சு 2005 இலும் பிறந்தனர்.[9] நீச்சலில் ஆர்வம் கவிந்த இவர் Masters Swim Club இல் உள்ளார். இவர் இடையிடையே அறிவியல் பணிக்கு விடுப்பு கொடுத்து நீச்சலில் கலந்துகொள்கிறார்.[10]
தகைமைகளும் விருதுகளும்
தொகு- வானியலுக்கான அன்னி ஜே. கேனன் விருது (1994)[11]
- பக்கார்டு ஆய்வு விருது (1996)[12]
- அமெரிக்க வானவியல் கழகத்தின் வானியலுக்கான நியூட்டன் லேசி பியர்சு பரிசு (1998)[11]
- அமெரிக்க இயற்பியல் குமுகத்தின் மரியா கோப்பர்ட்-மேயர் விருது (1999)[13]
- சேக்கிளர் பரிசு (2004)[14]
- வானியலில் கிராஃபோர்டு பரிசு (2012)[15]
- இயற்பியலுக்கான நோபல் பரிசு (2020)[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "High-res images of galactic center". W. M. Keck Observatory. Archived from the original on செப்டெம்பர் 29, 2010. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 20, 2009.
- ↑ 2.0 2.1 "20 Young Scientists to Watch". Discover Magazine. பார்க்கப்பட்ட நாள் 2008-03-06.
- ↑ "Facts on the Nobel Prize in Physics". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
- ↑ 4.0 4.1 "Press release: The Nobel Prize in Physics 2020". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
- ↑ Overbye, Dennis; Taylor, Derrick Bryson (6 October 2020). "Nobel Prize in Physics Awarded to 3 Scientists for Work on Black Holes - The prize was awarded half to Roger Penrose for showing how black holes could form and half to Reinhard Genzel and Andrea Ghez for discovering a supermassive object at the Milky Way’s center.". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2020/10/06/science/nobel-prize-physics.html. பார்த்த நாள்: 6 October 2020.
- ↑ Jennifer Lauren Lee. "Science Hero:Andrea Mia Ghez". The My Hero Project. பார்க்கப்பட்ட நாள் 2009-09-23.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Linda Copman. "Zeroing in on Black Holes". W. M. Keck Observatory. Archived from the original on 2011-07-26. பார்க்கப்பட்ட நாள் 2009-09-23.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Changing Faces of Astronomy". Science. Archived from the original on மார்ச்சு 16, 2008. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 20, 2008.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Stuart Wolpert (September 23, 2008). "UCLA astronomer Andrea Ghez named MacArthur Fellow". UCLA. பார்க்கப்பட்ட நாள் 2011-04-16.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Poster Project Biographies
- ↑ 11.0 11.1 "Annie J. Cannon Award in Astronomy". அமெரிக்க வானவியல் கழகம். Archived from the original on February 28, 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-03-20.
- ↑ "Packard Fellows – Sorted by Award Year: 1996". வர்ஜீனியா பல்கலைக்கழகம். Archived from the original on November 3, 2007. பார்க்கப்பட்ட நாள் 2008-03-20.
- ↑ "Maria Goeppert Mayer Award". www.aps.org.
- ↑ "Honors and Awards received by IGPP/UCLA Faculty and Research Staff". கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்). Archived from the original on February 4, 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-03-20.
- ↑ "The Crafoord Prize in Mathematics 2012 and The Crafoord Prize in Astronomy 2012". கிராஃபோர்டு பரிசு. Archived from the original on 2012-12-27. பார்க்கப்பட்ட நாள் 2012-01-19.
வெளி இணைப்புகள்
தொகு- Ghez UCLA home page
- Andrea Ghez, Astronomy / UCLA Spotlight பரணிடப்பட்டது 2008-02-11 at the வந்தவழி இயந்திரம்
- UCLA Faculty Research Lecture: Unveiling a Black Hole at the Center of the Milky Way
- Finkbeiner, Ann (March 20, 2013), "As an early adopter of astronomical technology, Andrea Ghez is revealing secrets about the giant black hole at the Galaxy's centre", Nature, Bibcode:2013Natur.495..296F, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1038/495296a
- Andrea Ghez at TED