கிராஃபோர்டு பரிசு
கிராஃபோர்டு பரிசு 1980இல் தொடங்கியஆண்டுதோறும் வழஙப்படும் பரிசாகும். இது சுவீடிய தொழிலதிபரான [[ஃஓகுலர் கிராஃபோர்டாலும் அவரது துணைவியாரான ஆன்னா கிரேட்டா கிராஃபோர்டாலும் உருவாக்கப்பட்ட பரிசாகும். இது சுவீடிய அரசு அறிவியல்புலங்கள் கல்விக்கழகம் பொறுப்பில் தரப்படுகிறது. இந்தப் பரிசு நான்கு வகையினங்களில் வழங்கப்படுகிறது: வானியலும் கணிதமும்; புவியியல்புலங்கள்; உயிரியல்புலங்கள் (குறிப்பாகச் சுற்றுச்சூழல்தொடர்புள்ள தலைப்புகள்); பன்முடக்கழற்சி . பன்முடக்கழற்சி நோயால் தன் இறுதிநாளில் ஃஓகுலர் மிகவும் அல்லலுற்றுள்ளார். "இப்பரிசு நோபெல் பரிசுகட்கு மிகைநிரப்பாக வழங்கப்படுவதாக்க் சுவீடியக் கல்விக்காகம் கூறுகிறது".[1] ஒவ்வோராண்டும் ஒரு பரிசு மட்டுமே தேர்வு செய்யும் வகையினத்துக்குப் பின்வரும் சுழல்வட்ட முறையில் தரப்படும். வானியலும் கணிதமும்; பிறகு புவியியல்புலங்கள்; அதன்பிறகு உயிரியல்புலங்கள்; பன்முடக்கழற்சி.[1] குறிப்பிட்ட வகையினத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதென இதற்கென அமைக்கப்படும் சிறப்புக்குழு கருதினால் மட்டுமே இப்பரிசு வழங்கப்படும்.[1] கிராஃபோர்டு பரிசாளர்களின் பெயர்கள் ஒவ்வோராண்டும் ஜனவரி நடுவில் அறிவிக்கப்படும்; ஏப்பிரலில் நடக்கும் கிராஃபோர்டு நாளில் இப்பரிசு சுவீடன் அரசரால் வழங்கப்படும். இவரே திசம்பரில் நோபெல் பரிசையும் உரிய விழாவில் வழஙுவார்.[1][2] பரித்தொகை, 2015 நிலவரப்படி, வார்ப்புரு:SEK (அல்லது US$500,000) ஆகும். இம்மதிப்பு பரிசாளர் மேற்கொண்டு செய்யவிருக்கும் ஆய்வுகளுக்காக வழங்கப்படுகிறது.
கிராஃபோர்டு பரிசு | |
---|---|
விளக்கம் | சுவீடிய அரசு அறிவியல்புலங்கள் கல்விக்கழகம் வானியல், கணிதம், உயிரியல்புலங்கள், புவியியல்புலங்கள், பன்முடக்கழற்சி வழங்கும் பரிசு |
நாடு | சுவீடன் |
வழங்குபவர் | சுவீடிய அரசு அறிவியல்புலங்கள் கல்விக்கழகம் |
முதலில் வழங்கப்பட்டது | வார்ப்புரு:தொடக்கம் |
இணையதளம் | www |
தொடக்கநிலைப் பரிசாளர்களான விளாதிமிர் ஆர்னோல்டு , உலூயிசு நைரன்பர்கு ஆகிய இருவருக்கும் அவர்கள் நேரிலா வகைக்கெழுச் சமன்பாடுகளின் கோட்பாட்டுக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டதாக கல்விக்கழகம் கூறுகிறது. இப்பரிசு 2012இல் அவரது வானியல் பங்களிப்புகளுக்காக ஒரு பெண்மணிக்கு, அதாவது, ஆந்திரியா கேழ்சு அவர்கட்கு வழங்கப்பட்டது.
பரிசாளர்கள்
தொகுஆண்டு | வகைமை | படிமம் | Laureate | நாட்டினம் | பணி[3] |
---|---|---|---|---|---|
1982 | கணிதம் | விளாதிமிர் ஆர்னோல்டு | நேரிலா வகைக்கெழுச் சமன்பாடுகளின் கோட்பாடு | ||
உலூயிசு நைரன்பர்கு | [A] | ||||
1983 | புவியியல் புலங்கள் | — | Edward Lorenz | புவிப்புற நீரியக்கவியல் | |
ஃஎன்றி சுட்டம்மல் | |||||
1984 | உயிரியல்புலங்கள் | டானியல் எச்.ஜான்சென் | இணைப்படிமலர்ச்சி | ||
1985 | வானியல் | இலைமேன் சுபிட்சர் | உடுக்கணவெளி ஊடக ஆய்வுகள் | ||
1986 | புவியியல்புலங்கள் | கிளாடேஅல்லெகுரே | ஓரகத் தனிம புவிவேதி உறவுகள் | ||
— | Gerald J. Wasserburg | ||||
1987 | உயிரியல்புலங்கள் | — | யூகின் பி. ஓடம் | சூழலமைப்புச் சூழலியல் | |
ஃஓவார்டு ட்டி. ஓடம் | |||||
1988 | கணிதம் | பியேர் டிலைன் | இயற்கணித வடிவியல் | ||
அலெக்சாந்தர் கிரோதெண்டியெக்[B] | None | ||||
1989 | புவியியல்புலங்கள் | ஜேம்சு வான் ஆலன் | விண்வெளி ஆய்வு, வான் ஆலன் பட்டைகளின் கண்டுபிடிப்பு | ||
1990 | உயிரியல்புலங்கள் | பௌல் ஆர். எகிரிலிச் | துண்டாடபட்ட உயிர்த்திரள்களின் இயங்கியலும் மரபியலும் | ||
எட்வார்டு ஆசுபார்ன் வில்சன் | தீவு உயிர்ப் புவியியல் கோட்பாடு | ||||
1991 | வானியல் | — | ஆலன் இரெக்சு சாண்டேகு | பால்வெளிகளின் ஆய்வு | |
1992 | புவியியல்புலங்கள் | — | அடோல்ஃப் செய்லாச்செர் | உயிர்ப்படிமலர்ச்சி ஆய்வு | |
1993 | உயிரியல்புலங்கள் | — | டபுள்யு. டி. ஃஆமில்டன் | சுற்றத் தேர்வும் மரபியல் உறவுகளும் சார்ந்த கோட்பாடுகள் | |
செய்மவர் பெஞ்செர் | பழ ஈக்களின் மரபியல், நரம்புடலியல் ஆய்வுகள் | ||||
1994 | கணிதம் | சைம்ன் டொனால்ட்சன் | நாற்பருமான வடிவியல் | ||
சிங்-துங் யா | [C] | வகைக்கெழு வடிவியலில் நேரிலா நுட்பங்கள் | |||
1995 | புவியியல்புலங்கள் | — | வில்லி டான்சுகார்டு | ஓரகத்தனிமப் புவிப்பகுப்பாய்வு முறைகளை உருவாக்கல் | |
நிகோலசு சாக்கிள்டன் | |||||
1996 | உயிரியல்புலங்கள் | இராபர்ட் எம். மே | சூழலியல் ஆய்வு | ||
1997 | வானியல் | — | ஃபிரெட் ஃஆயில் | விண்மீன்கள், உடுக்கணப்படிமலர்வில் அணுக்கரு வினைகள் ஆய்வு | |
— | எட்வின் சால்பீட்டர் | ||||
1998 | புவியியல்புலங்கள் | டாண் எல். ஆண்டர்சன் | புவியக்க் கட்டமைப்பும் நிகழ்வுகளும் பற்றிய ஆய்வு | ||
— | ஆடம் எம். த்சீவன்சுகி | [D] | |||
1999 | உயிரியல்புலங்கள் | எர்னெசுட்டு மேயர் | படிமலர்ச்சி உயிரியல் கருத்தை உருவாக்கல் | ||
ஜான் மேநார்டு சுமித் | |||||
— | ஜார்ஜ் சி. வில்லியம்சு | ||||
2000 | பன்முடக்கழற்சி (Polyarthritis) | — | மார்க் ஃபெல்டுமேன் | TNF-ஆல்ஃபா வரையறை | |
இரவிந்தர் என். மைனி | |||||
2001 | கணிதம் | அலைன் கான்னேசு | வினையி இயற்கணிதக் கோட்பாடு, non-commutative வடிவியலை உருவாக்கல் | ||
2002 | புவியியல்புலங்கள் | — | டான் பி. மெக்கெஞ்சி | பாறைக்கோள இயங்கியல் | |
2003 | உயிரியல்புலங்கள் | கார்ள் வூசு | உயிரின் மூன்றாம் களம் | ||
2004 | பன்மடக்கழற்சி | யூகின் சி. பட்சர் | வெண்குருதி உயிர்க்கலங்களின் மூலக்கூற்று இயங்கமைவுகளை ஆய்தல் | ||
திமோத்தி ஏ. சுப்பிரிங்கர் | |||||
2005 | வானியல் | ஜேம்சு ஈ. கன் | புடவிப் பெருங்கட்டமைப்பு பற்றிய புரிதல் | ||
ஜேம்சு பீபுள்சு | |||||
மார்ட்டின் இரீசு | |||||
2006 | புவியியல்புலங்கள் | வால்லாசு சுமித் புரோக்கெர் | புவிக்கோள கரிம வட்டிப்பு | ||
2007 | உயிரியல்புலங்கள் | — | இராபர்ட் டைவர்சு | சமூகப் படிமலர்ச்சி பகுப்பய்வு | |
2008 | வானியல் | Rashid Alievich Sunyaev | உயராற்றல் வானியற்பியல், அண்டவியல் பங்களிப்புகள் | ||
Mathematics | மக்சீம் கொந்த்சேவிச் | [E] | புதுமைக் கோட்பாட்டு இயற்பியல் சார்ந்த கணிதப் பங்களிப்புகள் | ||
எட்வார்டு விட்டன் | |||||
2009 | பன்முடக்கழற்சி | சார்ல்சு தினரெல்லோ | interleukinகளைத் தனிப்படுத்தலும் அழற்சி நோய்கள் தோன்றலில் அவற்றின் பாத்திரமும் | ||
தாதாமிட்சு கிழ்சிமோட்டோ | |||||
டோழ்சியோ ஃஇரானோ | |||||
2010 | புவியியல்புலங்கள் | வால்டேர் முன்க் | "கடல் நீரோட்டம், ஓதங்கள், அலைகள் பற்றிய முன்னோடிப் பங்களிப்புகளும் புவி இயங்கியலில் அவற்றின் பாத்திரமும்". | ||
2011 | உயிரியல்புலங்கள் | இல்க்கா ஃஆன்சுகிi | "விலங்கினத்திரள், தாவரத்திரள்களின்பாலும் அவற்றின் இயக்கத்தின்பாலும் இடவேறுபாடுகளின் தாக்கம் பற்றிய முன்னோடி ஆய்வுகள்". | ||
2012 | rowspan=வானியல் | இரீனார்டு கெஞ்சல் | "விண்மீன்கள் பால்வெளி மையத்தை வட்டணைகளில் சுற்றிவரும் நோக்கீடுகள், அதன்வழியாக மீப்பொருண்மை வாய்ந்த கருந்துளை இருப்பைக் கண்டறிதல்". | ||
ஆந்திரியா எம். கேழ்சு | |||||
கணிதம் | ழீன் பௌர்கெயின் | "for their brilliant and groundbreaking work in harmonic analysis, partial differential equations, ergodic theory, number theory, combinatorics, functional analysis and theoretical computer science". | |||
தெரென்சு தாவோ | | ||||
2013 | பன்முடக்கழற்சி | பீட்டர் கே. கிரிகெர்சன் | "for their discoveries concerning the role of different genetic factors and their interactions with environmental factors in the pathogenesis, diagnosis and clinical management of rheumatoid arthritis". | ||
இலார்சு கிளெரெசுகொகு | |||||
இராபர்ட் ஜே. வின்செசுட்டர் | |||||
2014 | புவியியல்புலங்கள் | — | பீட்டர் மோல்நார் | "for his ground-breaking contribution to the understanding of global tectonics, in particular the deformation of continents and the structure and evolution of mountain ranges, as well as the impact of tectonic processes on ocean-atmosphere circulation and climate". | |
2015 | உயிரியல்புலங்கள் | — | இரிச்சர்டு இலெவாண்டின் | "மரபியல் பல்லுருவாக்கம் பற்றிய புரிதல்". | |
— | டொமோக்கோ ஓக்தா |
குறிப்புகள்
தொகுa நைரன்பர்கு கனடாவில் பிறந்தார்.[4]
b கிரோத்தெண்டியெக் செருமனியில் பிறந்தாலும் வாழ்நாளின் பெரும்பகுதியை ஃபிரன்சில் கழித்தார். சட்டப்படி இவர் எந்நாட்டவரும் அல்ல. இவர் தான் பரிசுபெற மறுத்துவிட்டார்.[5]
c சிங்-துங் யா சீனாவில் பிறந்தார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "About the prize". The Royal Swedish Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 3 July 2009.
- ↑ "King of Sweden awards Crafoord Prize to IC researchers". Imperial College of Science, Technology and Medicine. 4 October 2000. பார்க்கப்பட்ட நாள் 5 July 2009.
- ↑ "The Crafoord Prize 1982–2009" (PDF). The Royal Swedish Academy of Sciences. Archived from the original (PDF) on 2 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 4 July 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Louis Nirenberg Receives National Medal of Science" (PDF). American Mathematical Society. October 1996. p. 1111. பார்க்கப்பட்ட நாள் 4 July 2009.
- ↑ Matthews, Robert (20 August 2006). "Mathematics, where nothing is ever as simple as it seems". Daily Telegraph. பார்க்கப்பட்ட நாள் 5 July 2009.
- ↑ Overbye, Dennis (17 October 2006). "The Emperor of Math". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 5 July 2009.
- ↑ "Dziewonski Receives 2002 William Bowie Medal". American Geophysical Union. Archived from the original on 27 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 5 July 2009.
- ↑ "Kontsevich and Witten Receive 2008 Crafoord Prize in Mathematics" (PDF). American Mathematical Society. May 2008. p. 583. பார்க்கப்பட்ட நாள் 5 July 2009.
வெளி இணைப்புகள்
தொகு[[