ஆனந்தாசிரமம், காஞ்ஞங்காடு

கேரளத்தில் உள்ள ஒரு ஆசிரமம்

ஆனந்தாசிரமம் (Anandashram) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டதிலுள்ள, நகராட்சியான காஞ்ஞங்காட்டில் அமைந்துள்ள ஒரு ஆன்மீக மையம் ஆகும். [1] இந்த ஆனந்தாசிரமமானது பாப்பா ராம்தாஸ் மற்றும் பூஜ்ய மாதாஜி என்று அழைக்கப்பட்ட சுவாமி ராமதாஸ் மற்றும் தாய் கிருஷ்ணாபாய் ஆகியோரால் 1931 ஆம் ஆண்டில் அமைக்கபட்டது. [2]

ஆனந்தாசிரமம்
வகைதனியார் நிர்வாகம்
உருவாக்கம்1931
உருவாக்குனர்Swami Ramdas and Mother Krishnabai
அமைவிடம்
ஆனந்தாசிரமம் அஞ்சல், காஞ்ஞங்காடு 671531, காசர்கோடு மாவட்டம், கேரளம், இந்தியா
,
காஞ்ஞங்காடு
, ,
இணையதளம்www.anandashram.org

ஆசிரமத்தின் நோக்கம்

தொகு

ஆசிரமத்தின் துவக்க விழாவின் போது, சுவாமி ராம்தாஸ் ஆசிரமத்தின் நோக்கத்தை விவரிக்கும் ஒரு சிற்றுரையை நிகழ்த்தினார்: "ஆசிரமத்தின் இலட்சியமானது உலகளாவிய அன்பும் சேவையுமே ஆகும். இது உலகின் அனைத்து உயிர்களிலும் தெய்வீகப் பார்வையை அடிப்படையாகக் கொண்டது . இங்கே ஆண், பெண், குழந்தை என அனைவரும் எந்த சமயத்தை சாதியையும் சேர்தவர்களாக இருந்தாலும் அனுமதிக்கபடுவர். பரஸ்பரம் அன்பு, சேவை உணர்வு போன்றவற்றை வளர்ப்பதற்கு முயலும் இடமாக இருக்கும், இதன் மூலம் இதன் எல்லைக்குள் உணரப்படுவது வெளி உலகில் மனித வாழ்க்கைக்கு சரியான ஒரு நடத்தைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். " [3]

இடம்

தொகு

ஆனந்தசிரமமானது கேரளத்தின் காசராகோடு மாவட்டத்தில் உள்ள காஞ்ஞங்காடு நகரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு சந்திப்பில் அமைந்துள்ளது. [4] ஒரு காலத்தில் ஆளரவமின்றி இருந்த இப்பகுதிக்கான சாலை இன்று, கடைகள், மருத்துவமனைகள் போன்றவைக் கொண்ட ஒரு பரபரப்பான சாலையாக உள்ளது. இந்த சாலையில் உள்ளூர், தோலை தூர பயணப் பேருந்துகள் இயங்குகின்றன. தொடருந்து நிலையத்தை அடைய மகிழுந்து அல்லது தானி மூலம் சுமார் 15 நிமிடங்களில் சென்றடையலாம். அருகிலுள்ள வானூர்தி நிலையம் மங்களூர் வானூர்தி நிலையம் ஆகும். இது ஆசிரமத்திலிருந்து இரண்டு மணி நேர (சாலை அல்லது தொடருந்து வழியாக) பயண நேரத்தில் உள்ளது.

பட தொகுப்பு

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "TOURISM IN KASARGOD". Archived from the original on 2012-04-14. பார்க்கப்பட்ட நாள் 2012-05-20.
  2. "Archived copy". Archived from the original on 9 May 2010. பார்க்கப்பட்ட நாள் 23 February 2010.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. Swami Ramdas, In the Vision of God, page 438.
  4. Kanhangad#Tourism

வெளி இணைப்புகள்

தொகு