ஆனந்தூர்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்

ஆனந்தூர், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் இராஜசிங்கமங்கலம் வருவாய் வட்டத்தில், இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 36 ஊராட்சிகளில் ஒன்றாகும்.

ஆனந்தூர், திருவாடானையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், இராமநாதபுரத்திலிருந்து 67 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதன் அருகே அமைந்த பேரூராட்சி இராஜசிங்கமங்கலம் ஆகும். 928.79 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ஆனந்தூர் கிராமத்தின், 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 3,605 ஆகும். இக்கிராமத்தில் 833 வீடுகள் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 623 401ஆகும். [1]

தொல்பொருள்

தொகு

ஆனந்தூர் அருகே அமைந்த சமந்தவயலில், கிபி 11ம் நூற்றாண்டு காலத்திய கௌதம புத்தர் சிற்பம் 2015ல் கண்டெடுக்கப்பட்டது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Anandur
  2. Stone idol of Buddha unearthed
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தூர்&oldid=3536561" இலிருந்து மீள்விக்கப்பட்டது