இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இராஜசிங்கமங்கலம் வட்டத்தில் அமைந்த இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இராஜசிங்கமங்கலத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 70,780 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 18,099 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 28 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுஇராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்;[3]
திருப்பாலைக்குடி •
கோவிந்தமங்கலம் • புல்லமடை • கடலூர் • கருங்குடி • ஆனந்தூர் • வரவணி • இராதனூர் • செங்குடி • சாத்தனூர் • சணவேலி • கொத்திடல் களக்குடி • தும்படைக்காகோட்டை • ஏ. ஆர். மங்கலம் • சித்தூர்வாடி • ஆயிங்குடி • பாரனூர் • செவ்வாய்பேட்டை • அ. மனக்குடி • கற்காத்தகுடி • காவனூர் • காவனக்கோட்டை • அழகர்தேவன்கோட்டை • கொட்டக்குடி • சேத்திடல் • ஒடைக்கால் • திருத்தேர்வளை • ஊரனங்குடி • கள்ளிக்குடி • கூடலூர் • பிச்சங்குறிச்சி • சோழந்தூர் • சிறுநாகுடி • மேல்பனையூர் • வடக்கலூர்
வெளி இணைப்புகள்
தொகு- இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்