ஆனந்த்சங்கர் துருவ்

ஆனந்த்சங்கர் துருவ் (ஆங்கிலம்: Anandshankar Bapubhai Dhruv, 1869 - 1942) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். இவர் கல்வியாளராகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாசிரியராகவும் அறியப்பட்டார். இவர் முமுக்ஷு, "ஹிந்தஹித்சிந்தக் எனும் பெயர்களில் எழுதிவந்தார்.[1][2]

ஆனந்த்சங்கர் துருவ்
ஆனந்த்சங்கர் துருவ்
ஆனந்த்சங்கர் துருவ்
பிறப்புபெப்ரவரி 25, 1869(1869-02-25)
அகமதாபாத், குஜராத், இந்தியா
இறப்பு7 ஏப்ரல் 1942(1942-04-07) (அகவை 73)
தொழில்எழுத்தாளர்
மொழிகுஜராத்தி
தேசியம்இந்தியன்

வாழ்க்கைதொகு

இவர் அகமதாபாத்தில் 1869 பிப்ரவரி மாதம் 25 ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை கத்தியவார் பகுதியின் அலுவலர் ஆவார். ஓய்விற்குப் பின்னர் பரோடா மாகாணத்தில் பணிபுரிந்தவர். இவர் இளம் வயதில் ஆங்கிலவழிக் கல்வியும் சமஸ்கிருதமும் கற்றார். குஜராத் கல்லூரியில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றினார். குஜராத் பல்கலைக்கழகம் உருவாக முயன்றவர்களுள் இவரும் ஒருவர்.

மேற்கோள்கள்தொகு

  1. Dhruva, Anandshanker in the Encyclopaedia of Indian Literature: devraj to jyoti. pp 1004-5
  2. "Anand Shankar Bapubhai Dhruv, Sanskrit Pandit and editor of monthly magazine 'Vasant'". 2014-04-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-27 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்சங்கர்_துருவ்&oldid=3543216" இருந்து மீள்விக்கப்பட்டது