ஆனந்த் சங்கர் (இயக்குநர்)

இந்திய திரைப்பட இயக்குநர்
(ஆனந்த் சங்கர் (இயக்குனர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆனந்த் சங்கர், ஓர் இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியராவார். இவர் இந்தி திரைப்பட இயக்குநர் சித்தார்த் ஆனந்தின் அஞ்சனா அஞ்சனி எனும் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றத் துவங்கி இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும், துப்பாக்கி திரைப்படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றினார்[1]. 2014ம் ஆண்டு அரிமா நம்பி எனும் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தற்பொழுது நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் இருமுகன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ஆனந்த் சங்கர்
பிறப்புநவம்பர் 26, 1986 (1986-11-26) (அகவை 37)
தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர்

தேசிய விருது பெற்ற நாடக ஆசிரியர் கோமல் சுவாமிநாதனின் பேரன் ஆனந்த் சங்கர் என்றும் அறியப்படுகிறார்.[2]

பணியாற்றிய திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் குறிப்பு
இயக்குநர் திரைக்கதை
2014 அரிமா நம்பி  Y  Y விக்ரம் பிரபு, பிரியா ஆனந்து நடிப்பில்
2015 டைனமைட்  Y அரிமா நம்பியின் தெலுங்கு மீளுருவாக்கம்
2016 இருமுகன்  Y  Y விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில்

மேற்கோள்கள் தொகு

  1. "முத்திரை பதிக்கிறார்களா ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர்கள் ?". தினமலர். 2016-03-03.
  2. Kumar, Ashok (31 May 2014). "Audio Beat: Arima Nambi". The Hindu. http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-arima-nambi-sivamani-belts-it-out/article6069756.ece. பார்த்த நாள்: 5 June 2014.