ஆனந்த் எக்டே ஆசிசரா

இந்திய சுற்றுச் சூழலியாளர்

ஆனந்த் எக்டே ஆசிசரா (Ananth Hegde Ashisara) இந்தியாவின் கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். கர்நாடக அரசாங்க அமைப்பான கர்நாடக பல்லுயிர் வாரியத்தின் தலைவராகவும் உள்ளார்.

ஆனந்த் எக்டே ஆசிசரா
Ananth Hegde Ashisara
தேசியம்இந்தியர்
பணிசுற்றுச்சூழலியாளர்

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கம்

தொகு

எக்டே ஆசிசரா முன்னதாக மேற்குத் தொடர்ச்சிப் பணிக்குழுவின் தலைவராகவும் இருந்தார். குறிப்பாக உலகப் பாரம்பரிய தளமாகக் கருதப்படும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இவர் ஈடுபட்டுள்ளார்.[1] சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு, மேற்குச் சரிவுகளை உள்ளடக்கிய பகுதியான மலைநாட்டைச் சேர்ந்த மக்கள் குழுவான விருக்சு ரக்சா அந்தோலன் என்ற குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அம்பரகுடா மலைத்தொடர் மற்றும் அதைச் சுற்றியும் மேற்கொள்ளப்படும் சுரங்க நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் இயக்கத்தில் இவர் ஈடுபட்டுள்ளார்.[2]

400 ஆண்டுகள் பழமையான பெங்களுரு ஆலமரம், 600 ஆண்டுகள் பழமையான பீசப்பூர் தாலுக்காவிலுள்ள பொந்தன்புளிய மரம், உத்தர கன்னடம் மாவட்டத்தைச் சேர்ந்த பனவாசி நகரிலுள்ள சீன ஆலமரம் உள்ளிட்ட கர்நாடகாவின் 10 பழமையான மரங்களுக்கு மரவியல் பாரம்பரியக் குறிச்சொல்லைப் பெற இவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். சப்பான் நாட்டில் 2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியில் அணுசக்தி திட்டங்களால் ஏற்பட்ட சேதத்தை அடுத்து அணுசக்தியின் பாதுகாப்பு குறித்தும் இவர் கவலை தெரிவித்து வருகிறார்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்_எக்டே_ஆசிசரா&oldid=3770264" இலிருந்து மீள்விக்கப்பட்டது