ஆனந்த பவன் அல்லது சுவராஜ் பவன் அலகாபாத்திலுள்ள நேரு குடும்பத்தின் பூர்வீக இல்லமாகும். ஆனந்த பவனில் மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் பயன்படுத்திய அறைகள் கண்ணாடி பேழைகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அறையினுள் அவர்கள் பயன்படுத்திய படுக்கை மற்றும் மேஜைகள் உள்ளன. ஜவஹர் பயன்படுத்திய புத்தகங்கள் மற்றும் தன் கைப்பட எழுதிய சில கடிதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இங்கு இந்திரா காந்தி 1917 இல் பிறந்தார், இந்திய விடுதலை போராட்டத்திற்காக பல முடிவுகள் எடுக்கப்பட்டது. ஆனந்த பவனுக்கு அருகிலுள்ள ஸ்வராஜ் பவன் 1930 இல் மோதிலால் நேருவால் இந்திய தேசிய காங்கிரசுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது.[1]

ஆனந்த பவனை இந்திரா காந்தி 1970இல் நாட்டிற்கு அர்பணித்தார். பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் மற்றும் கல்வி பயன்பாட்டிற்காக இது அருங்காட்சியகமாக அரசால் பராமரிக்கப்படுகிறது. தற்போது ஆனந்த பவன் அல்லது சுவராஜ் பவன் அலகாபாத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-11-19. பார்க்கப்பட்ட நாள் 2012-06-09.

படத்தொகுப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_பவன்&oldid=4142018" இலிருந்து மீள்விக்கப்பட்டது