ஆனைமுடி சோலை தேசியப் பூங்கா
ஆனைமுடி சோலை தேசியப் பூங்கா ( மலையாளம் : ആനമുടി ഷോല ദേശീയ ഉദ്യാനം) என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின், இடுக்கி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இது மன்னவன் சோலை, இடிவாரா சோலை, புல்லரடி சோலை ஆகியவற்றைக் கொண்டது. இதன் மொத்த பரப்பளவு சுமார் 7.5 km². இந்த புதிய பூங்கா குறித்த வரைவு அறிவிப்பு 21 நவம்பர் 2003 அன்று வெளியிடப்பட்டது. [1]
இந்தப் பூங்காவையும் அருகிலுள்ள மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா, எரவிகுளம் தேசிய பூங்கா, பாம்பாடும் சோலை தேசியப் பூங்கா, சின்னார் கானுயிர்க் காப்பகம், குறிஞ்சி மலை சரணாலயம் ஆகியவற்றையும் சேர்த்து மூணார் வனவிலங்கு கோட்டம் நிர்வகிக்கிறது. [2] எரவிக்குளம் தேசியப் பூங்கா உட்பட மேற்குத் தொடர்ச்சி மலைகள், ஆனைமலை துணை கிளஸ்டர் ஆகியவை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவால் உலக பாரம்பரிய களமாக தேர்வு செய்ய பரிசீலிக்கப்படுகிறது. [3]
நிலவியல்
தொகுஇந்தப் பூங்காவானது 2,152 மீட்டர்கள் (7,060 அடி) முதல் 2,305 மீட்டர்கள் (7,562 அடி) வரை உயரம் கொண்டதாக உள்ளது. இதன் சராசரி ஆண்டு மழையளவு சுமார் 2,500 மில்லிமீட்டர்கள் (98 அங்) ஆகும். ஆனைமுடி சோலை தேசிய பூங்காவானது மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா, எரவிகுளம் தேசிய பூங்கா, பம்படம் சோலை தேசிய பூங்கா, சின்னார் கானுயிர்க் காப்பகம், குறிஞ்சி மலை சரணாலயம் ஆகியவற்றுக்கு இடையே வனவிலங்கு வாழ்விட இணைப்புகளை கொண்டுள்ளது. இந்த பாதுகாக்கப்பட்ட பகுதியைச் சுற்றி இவை அனைத்தும் வருகின்றன. இந்த தேசிய பூங்கா ஆனைமலை துணைக் கிளஸ்டரின் ஒரு பகுதியாகும், இது சமீபத்தில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய திட்டத்தின் கீழ் உலக பாரம்பரிய கள நிலைக்கு உயர்த்த பரிசீலிக்க பரிந்துரைக்கப்பட்டது. [4]
குறிப்புகள்
தொகு- ↑ Mathikettan declared National Park (21 November 2003) The Hindu, retrieved on 8 Jun 2007
- ↑ K.S. Sudhi (3 November 2006) The Hindu, retrieved 6/21/2007 New lives bloom in பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம் Rajamala
- ↑ UNESCO, World Heritage sites, Tentative lists, Western Ghats sub cluster, Niligiris. retrieved 4/20/2007 World Heritage sites, Tentative lists
- ↑ "Anamudi Shola National Park". Eco-Informatics Center. ATREE. Archived from the original on 5 May 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-04-19.