எரவிகுளம் தேசிய பூங்கா
எரவிகுளம் தேசிய பூங்கா என்பது கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர் வரையில் ஏறத்தாழ 97 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்து உள்ளது .
எரவிகுளம் தேசிய பூங்கா மலையாளம்: ഇരവികുളം ദേശീയോദ്യാനം | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | இடுக்கி, கேரளம், இந்தியா மற்றும் பூயம்குட்டி காடு, எர்ணாகுளம் மாவட்டம், கேரளம், இந்தியா |
அருகாமை நகரம் | மூணார், பழனி, தேனி, கோதமங்கலம், அடிமாலி |
ஆள்கூறுகள் | 10°12′00″N 77°04′59″E / 10.2°N 77.083°E |
பரப்பளவு | 97 km2 (37 sq mi) |
வருகையாளர்கள் | 1,48,440 (in 2001) |
நிருவாக அமைப்பு | வன மற்றும் வனவிலங்கு துறை, கேரள அரசு |
www |
வரையாடுகள்
தொகுஇயற்கைப் பாதுகாப்பிற்கான அனைத்துலக ஒன்றியத்தின் (ஐயூசிஎன்) சிகப்புப் பட்டியலில் உள்ள வரையாடு எனப்படும் மான் இனம் நிலைத்திருக்கத்தக்க வகையில் அதிக எண்ணிக்கையில் இங்கு காணப்படுகின்றது.
கீரி, நீர்நாய், கருமைநிறக் கோடுகளையுடைய அணில்
தொகுநீலகிரி வரையாடு தவிர கரும்வெருகு, ரடி வகை கீரி (ruddy mongoose), காட்டு நீர்நாய், கருமைநிறக் கோடுகளையுடைய அணில் (dusky-striped sqirrel) போன்ற அரிய வகை உயிரினங்களும் இப்பூங்காவில் காணப்படுகின்றன.[1]
புதிய வகைத் தவளை இனம்
தொகுRaorchestes resplendens என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வகைத் தவளை இனம் இப்பூங்காவில் கண்டறியப்பட்டுள்ளது என்ற விபரம் கரண்ட் சயன்ஸ் என்ற பனுவலின் அண்மைய இதழில் வெளிவந்துள்ளது.