ஆனைவாரி அருவி
ஆனைவாரி அருவி என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம்,தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில், ஆத்தூரை அடுத்த அம்மாபாளையம் அருகே கல்வராயன் வனப்பகுதியில் ஆனைவாரி அருவி அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தில் வாரம் என்ற மலைகிராமத்தில் இருந்து உருவாகும் ஓடையானது, கல்வராயன் வனப்பகுதியில் ஆனைவாரி அருவியாக கொட்டுகிறது. இந்த அருவியில் இருந்து வரும் நீரும் வனப்பகுதியில் இருந்து வரும் நீரும் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கல்லாநத்தம் அருகே உள்ள முட்டல் ஏரியை நிரப்புகின்றன.[1] இந்த அருவியானது சேலம் மாவட்டக் குற்றாலம் என சுற்றுலாப் பயணிகளால் அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள முட்டல் ஏரியில் வனத்துறையால் படகு துறை அமைக்கப்பட்டுள்ளது.[2] இந்த அருவியானது ஆத்தூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சேலம் ஆத்தூர் அருகே பரபரப்பு ஆனைவாரி அருவியில் திடீர் வெள்ளம் குளித்துக்கொண்டிருந்த 30பேர் தவிப்பு: வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்". செய்தி. தினகரன். 3 செப்டம்பர் 2018. Archived from the original on 2018-10-03. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "ஆத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 100 பேர் உயிர் தப்பினர்!". செய்தி. thedupori.com. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2018.[தொடர்பிழந்த இணைப்பு]