ஆபிரிக்க அமெரிக்கர்

(ஆபிரிக்க-அமெரிக்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆபிரிக்க அமெரிக்கர்கள் (ஆப்பிரிக்க அமெரிக்கர்) அல்லது கறுப்பு அமெரிக்கர்கள் எனப்படுவோர் ஆபிரிக்க மூதாதையோரைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கர்கள் ஆவர். ஆபிரிக்க அமெரிக்கர்களில் 20 சதவீதமானவர்கள் ஐரோப்பிய பாரம்பரியம் கொண்டவர்களென மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் ஆபிரிக்க அமெரிக்கர் என்பது பெரும்பாலும் ஆபிரிக்க அடியைக் கொண்டோரையே குறிக்கின்றது. இவர்களில் பெரும்பான்மையோர் ஆபிரிக்காவிலிருந்து அத்திலாந்திக் அடிமை வியாபாரத்தின் போது அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்கர்களின் வாரிசுகளாவர்.[1][2][3]

மேல் இடது: டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ்; மேல் நடு: மார்ட்டின் லூதர் கிங்; மேல் வலது: எடுவர்ட் புருக்; கீழ் இடது: மால்கம் எக்ஸ்; கீழ் நடு: ரோசா பார்க்ஸ்; கீழ் வலது: சொஜோர்னர் டுரூத்

1860 அளவில் மூன்றரை மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக இருந்தனர். 1863 இல் அமெரிக்க சிவில் போர் காலத்தில் ஆபிரகாம் லிங்கன் அனைத்து அடிமை ஆபிரிக்கர்களுக்கும் சுதந்திரம் தரும் கட்டளையில் கையொப்பமிட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Race and Ethnicity in the United States: 2010 Census and 2020 Census". U.S. Census Bureau. August 12, 2021.
  2. "Religious tradition by race/ethnicity (2014)". The Pew Forum on Religion & Public Life. பார்க்கப்பட்ட நாள் April 5, 2019.
  3. "The Black Population: 2010" (PDF), Census Bureau, September 2011. "Black or African Americans" refers to a person having origins in any of the Black racial groups of Africa. The Black racial category includes people who marked the "Black, African Am., or Negro" checkbox. It also includes respondents who reported entries such as African American; Sub-Saharan African entries, such as Kenyan and Nigerian; and Afro-Caribbean entries, such as Haitian and Jamaican."
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபிரிக்க_அமெரிக்கர்&oldid=4111628" இலிருந்து மீள்விக்கப்பட்டது