ரோசா பார்க்ஸ்

குடியுரிமை செயற்பாட்டாளர்

ரோசா பார்க்ஸ் (Rosa Parks, றோசா பார்க்ஸ், பெப்ரவரி 4, 1913 - அக்டோபர் 24, 2005) ஒர் ஆபிரிக்க அமெரிக்க குடியுரிமைகள் செயற்பாட்டாளர். நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய் என ஐக்கிய அமெரிக்க காங்கிரசால் அழைக்கப்பட்டவர்.

ரோசா பார்க்ஸ்
பிறப்பு4 பெப்பிரவரி 1913
Tuskegee
இறப்பு24 அக்டோபர் 2005 (அகவை 92)
டிட்ராயிட்
கல்லறைWoodlawn Cemetery
பணிமனித உரிமை செயற்பாட்டாளர், public figure, அரசியற் செயற்பாட்டாளர்
விருதுகள்National Women's Hall of Fame, Michigan Women's Hall of Fame, Alabama Women's Hall of Fame, Spingarn Medal, Ellis Island Medal of Honor
கையெழுத்து

1955 டிசம்பர் 1-இல் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வெள்ளைக்காரப் பயணிக்காக ஆசனத்தைத் தர மறுத்தார். இதற்காகக் கைது செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சி இனப் பாகுபாட்டுக்கு எதிரான இயக்கத்தைத் தோற்றுவித்தது.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் அமெரிக்க மாநிலமான அலபாமாவிற்கு உட்பட்ட டஸ்கிகீ நகரில் பிறந்தார். ஜேம்ஸ் மெக்காலி, லியோனா ஆகியோர் இவரது பெற்றோர். இவர் கலப்பு இனத்தவர் ஆவார்.[1] இளவயதில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். பெற்றோரின் மணமுறிவால் தாய்வழி உறவினர்களுடன் வாழ நேரிட்டது. ரோசா லூசி மெக்காலி என்பது இவரது இயற்பெயர் ஆகும். இளவயதில் பள்ளிகளில் படித்தார். தாய், தாய்வழி பாட்டி ஆகியோரின் உடல்நலக் குறைவால் கல்லூரி கல்வியை பாதியில் நிறுத்திக்கொள்ள நேரிட்டது. அந்த காலத்தில் இன வேறுபாட்டு சட்டங்கள் செயற்படுத்தப்பட்டிருந்தன. போக்குவரத்து வண்டிகளில் கருப்பர்களுக்கு தனியான இடங்கள் வழங்கப்பட்டன. கருப்பர்களுக்கான கல்வியும் மட்டுப்படுத்தப்பட்டது. 1932 இல், ரேமண்ட் பார்க்ஸ் என்பவரை திருமணம் செய்தார். அவர் காலத்தில் கல்வி கற்ற கருப்பர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

நடவடிக்கைகள்

தொகு

மாண்ட்கோமெரி பேருந்து புறக்கணிப்பு

தொகு

1900இல், மாண்ட்கோமெரி பேருந்துகளில் இனவாரியாக இருக்கைகள் பிரிக்கப்பட்டன. பேருந்தில் கூட்டம் மிகுந்தால் எழுந்து நிற்கத் தேவையில்லை என்றும், பிறருக்காக இடத்தை விட்டுத்தர வேண்டியதில்லை என்றும் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், காலப்போக்கில், விதிகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன. வெள்ளையர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் காலியாக இருந்தாலும், கருப்பர்கள் அனுமதிக்கப்படவில்லை. பேருந்துகளின் முதல் நான்கு வரிசையில் இருந்த இருக்கைகள் வெள்ளையர்களுக்காக ஒதுக்கப்பட்டவை. பின்னிருக்கைகள் கருப்பர்களுக்கு ஒதுக்கப்பட்டன. கருப்பர்களே அதிகளவில் பயணித்தனர். வெள்ளையர்கள் அதிகளவில் இருந்தால், கருப்பர்கள் பின்னிருக்கைகளுக்கு நகர்ந்து உட்கார வைக்கப்பட்டனர். இது குறித்து பல முறை புகார்கள் அளிக்கப்பட்டன. ஒரு முறை பேருந்தில் பயணச்சீட்டு பெற்று அமர்ந்தார். ஆனால், இவரை வலுக்கட்டாயமாக இறங்குமாறு பணித்தார் ஓட்டுனர். இறங்கி பின்கதவு வழியாக ஏறுமாறு செய்தார். இவர் இறங்கும் முன்னரே பேருந்து புறப்பட்டது.[2] ஒரு முறை அதே பெருந்தில் பயணித்த போது, அதிகளவில் வெள்ளையர்கள் ஏறினர். இதனால், அவரை பின்னிருக்கைக்கு நகருமாறு சொன்னார் நடத்துனர். இவர் உட்பட நால்வரின் இடம் வெள்ளையருக்கு தேவைப்பட்டது. மற்ற கருப்பர்கள் இடம் தந்து எழுந்து நின்றனர். இவர் மட்டும் எழ மறுத்தார். நகரத்தின் சட்ட விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதுக்கு உள்ளானார். இதைத் தொடர்ந்து பேருந்தை புறக்கணிக்க பலர் கிளம்பினர். பெரும்பாலான கருப்பர்கள் மற்ற வாகனங்களிலும், நடந்தும் பயணத்தை மேற்கொண்டனர்.[3]

பிற்கால நிகழ்வுகளும் இறப்பும்

தொகு

இவர் கைதானதைத் தொடர்ந்து குடிமக்கள் உரிமை இயக்கத்தின் சின்னமாகப் போற்றப்பட்டார். கைதானதால் இவரது வேலை பறிக்கப்பட்டது. இவரும் இவர் கணவரும் விர்ஜீனியாவில் உள்ள ஹாம்டன் நகரத்திற்கு சென்றனர். அங்கு வேலை கிடைக்கவில்லை. டெற்றாய்ட்டில் உள்ள ஆப்பிரிக்க அரசு அதிகாரியிடம் பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது.[4] பிற்காலத்தில் இவரது குடும்பத்தினரில் பலர் நோயினால் பாதிக்கப்பட்டனர். குடும்பத்தினர் ஒவ்வொருவராக இறந்தனர். 1992 இல், ”ரோசா பார்க்ஸ்: மை ஸ்டோரி” என்ற தன்வரலாற்று நூலை வெளியிட்டார். இவர் இறப்பதற்கு முன்பு வரையிலும் டெற்றாய்ட் நகரில் வாழ்ந்தார். 92 வயதில் இயற்கை மரணம் எய்தினார். இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. இவரது உறவினர்கள் மிச்சிகனிலும், அலபாமாவிலும் வாழ்ந்தனர். இவரது இறுதிச் சடங்கின்போது டெற்றாய்ட், மாண்ட்கோமெரி நகர அரசுகள் மரியாதை செலுத்தின. இந்த இரண்டு நகரங்களில் ஓடிய பேருந்துகளின் முன்னிருக்கைகளில் கருப்பு நிற ரிப்பன்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டன. கேண்டலீசா ரைஸ் இவரைப் புகழ்ந்து உரையாற்றினார். அரசு அதிகாரியாக இல்லாதவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது குறைவு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் இவர். இவர் புதைக்கப்பட்ட வழிபாட்டுத் தலத்திற்கு இவரது பெயர் இடப்பட்டது.

இவற்றையும் பார்க்க

தொகு

ஒரு அவலம் கீழ்கோர்ட் ஒன்று ரோசாவை கைது செய்தது செல்லும் என்றது தான்,கூடவே பதினான்கு டாலர் அபராதம் விதித்தார்கள். ஒரு நாள் இரண்டு நாளில்லை ஒரு வருடம் முழுக்க தீராத நெஞ்சுரத்தோடு (சரியாக 381 நாட்கள் )அப்படியே போராடி வென்றார்கள் அவர்கள் .சமமான இருக்கை வசதி உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பின் அவர்களுக்கும் கிடைத்தது.[5]

குடும்பம்

தொகு

தன கணவர்,பிள்ளை,சகோதரர்,தாய் என அனைவரையும் கேன்சருக்கு இழந்து தனிமையில் இருந்த பொழுதெல்லாம் மக்களின் உரிமைக்காக பேசி அதில் கிடைத்த வருமானத்தை கறுப்பின மக்களின் நலனுக்கே செலவிட்டார்.”விடுதலை போரின் தாய் !”என அழைக்கப்படும் அவரின் நினைவுதினம் இன்று .”அன்று அவர் எழ மறுத்த்தால் தான் இன்று நாங்கள் தலைநிமிர்ந்து நிற்கவும்,தன்மானத்தோடு நடக்கவும் முடிகிறது !” என அவரின் மரணத்தின் பொழுது கண்ணீரோடு குறித்தார்கள் கறுப்பின பெண்கள்

சிறப்புகள்

தொகு

திரைப்படங்களில்

தொகு
  • அகியூமினி என்ற பாடல் தொகுப்பில் ரோசா பார்க்ஸ் என்ற பாடல் இடம் பெறறது. வானொலியில் அதிகமகா ஒலிபரப்பப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.[6]
  • ”மைட்டி டைம்ஸ்: தி லிகசி ஆஃப் ரோசா பார்க்ஸ்” என்ற ஆவணத் திரைப்படம், அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
  • நெவில் சகோதரர்கள் இவரைப் பற்றிய பாடலை சிஸ்டர் ரோசா என்ற பெயரில் வெளியிட்டனர்.
  • தி ஸ்டோன் ரோசஸ் படத்தின் டேபிரேக் என்ற பாடலில் இவரை நினைவுபடுத்தும் வரிகள் பயன்படுத்தப்பட்டன.

நினைவுச்சின்னங்களும் பரிசுகளும்

தொகு
  • 1976இல், டெற்றாய்ட்டில் உள்ள 12வது தெருவிற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.
  • 1980இல், மார்ட்டின் லூதர் கிங் விருதினைப் பெற்றார்.
  • 1983இல், மிச்சிகனில் உள்ள சிறந்த மகளிருக்கான நினைவுக்கூடத்தில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டார்.
  • தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா விடுதலை பெற்றபோது, அவரை வரவேற்க சென்ற குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • அமெரிக்க அரசின் உயரிய விருதான பிரெசிடென்சியல் மெடல் ஆஃப் பிரிடம் என்ற விருது வழங்கப்பட்டது.
  • இருபதாம் நூற்றாண்டின் முக்கிய நபர்களில் இவர் பெயரையும் சேர்த்தது டைம்ஸ் நாளேடு.
  • உலகளவில் 24 பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
  • மாண்ட்கோமெரியில் உள்ள அருங்காட்சியகத்திற்கும், நூலகத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது.
  • மொலெஃபி கேட்டே அசாண்டே என்ற அறிஞர் சிறந்த நூறு அமெரிக்க வாழ ஆப்பிரிக்கர்களுள் ஒருவராக இவரை தேர்ந்தெடுத்துள்ளார்.
  • அதிக தைரியத்தை உடையவர் என்று போற்றப்பட்டு ஆளுநர் விருது வழங்கப்பட்டது.
  • இவரின் இறுதிச் சடங்கின்போது, அமெரிக்க அரசின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
  • 2012இல், உட்டாவில் உள்ள வெஸ்ட் வேலி சிட்டி என்ற பகுதிக்கு இவரது பெயர் இடப்பட்டது.
  • அமெரிக்க தேசிய சிலை காட்சியகத்தில் அமெரிக்காவின் முன்னோடிகளின் சிலைகள் உள்ளன. அங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகளில் முதல் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கரின் சிலை இவருடையதே.
  • 2013 இல் இவரைப் போற்றி அஞ்சல் தலைகளை வெளியிட்டது அமெரிக்க அரசு.

சான்றுகள்

தொகு
  1. Douglas Brinkley, Rosa Parks, Chapter 1, excerpted from the book published by Lipper/Viking (2000), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-89160-6. Chapter excerpted on the site of the New York Times. Retrieved July 1, 2008.
  2. Woo, Elaine (2005-10-25). "She Set Wheels of Justice in Motion". லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 22 July 2011.
  3. Rita Dove, "Heroes and Icons: Rosa Parks: Her simple act of protest galvanized America's civil rights revolution" பரணிடப்பட்டது 2005-10-26 at the வந்தவழி இயந்திரம், Time, June 14, 1999. Retrieved July 4, 2008.
  4. E. R. Shipp (2005-10-25). "Rosa Parks, 92, Founding Symbol of Civil Rights Movement, Dies". New York Times: p. 2. http://www.nytimes.com/2005/10/25/us/25parks.html?pagewanted=2. பார்த்த நாள்: 2010-01-01. 
  5. [பிப்ரவரி 4: ரோசா பார்க்ஸ் பிறந்த தின சிறப்பு பகிர்வு "இந்தியாவின் பொறியியல் துறை தந்தை விஸ்வேஸ்வரய்யா"]. Vikatan. 26 march 2015. பிப்ரவரி 4: ரோசா பார்க்ஸ் பிறந்த தின சிறப்பு பகிர்வு. பார்த்த நாள்: 16 February 2017. 
  6. Wallinger, Hanna (2006). Transitions: Race, Culture, and the Dynamics of Change. LIT Verlag Berlin-Hamburg-Münster. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8258-9531-9.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசா_பார்க்ஸ்&oldid=3256672" இலிருந்து மீள்விக்கப்பட்டது