ஆப்பிரிக்கக் கருந்தலை மாங்குயில்

கருப்புத்தலை மாங்குயில் (Black-headed oriole) அல்லது ஆப்பிரிக்கக் கருந்தலை மாங்குயில் (ஓரியோலசு லார்வடசு) என்பது ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.

வகைப்பாட்டியல்

தொகு

சில வகைப்பாட்டியலாளர்கள் மலை மாங்குயிலைக் கருந்தலை மாங்குயிலின் கிளையினமாக கருதுகின்றனர். கருந்தலை மாங்குயில் ஆப்பிரிக்கக் கருந்தலை மாங்குயில், கிழக்கு கருந்தலை மாங்குயில் மற்றும் கிழக்கு மாங்குயில் எனவும் அழைக்கப்படுகிறது.

துணை இனங்கள்

தொகு

இந்த சிற்றினத்தின் கீழ் ஐந்து துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[1]

  • ஓ. லா. ரோலேட்டி - சால்வடோரி, 1864. முதலில் ஒரு தனிச் சிற்றினமாக விவரிக்கப்பட்டது. தெற்கு சூடான் மற்றும் தெற்கு எத்தியோப்பியாவிலிருந்து கிழக்கு காங்கோ மக்களாட்சிக் குடியரசு மற்றும் மத்திய கென்யா வரை காணப்படுகிறது
  • ஓ. லா. ரெய்ச்செனோவி - செட்லிட்சு, 1916 : சோமாலியாவிலிருந்து கிழக்கு தான்சானியா வரை
  • கென்யா கருந்தலை மாங்குயில் (ஓ. லா. அங்கோலென்சிசு) - நியூமன், 1905: அங்கோலா மற்றும் நமீபியாவிலிருந்து மேற்கு தான்சானியா மற்றும் வடக்கு மொசாம்பிக் வரை
  • ஓ. லா. திபிசென் - லாசன், 1962 : தெற்கு தான்சானியா கடலோரம் முதல் தெற்கு மொசாம்பிக் கடலோரம் வரை
  • ஓ. லா. லார்வடசு - லிச்சென்ஸ்டீன், எம். ஹெச். கே. 1823: தெற்கு ஜிம்பாப்வேயிலிருந்து உள்நாட்டின் தெற்கு மொசாம்பிக் மற்றும் கிழக்கு தென்னாப்பிரிக்கா வரை

விளக்கம்

தொகு

கருந்தலை மாங்குயில், பிரகாசமான மஞ்சள் உடலுடன், மாறுபட்ட கருப்பு தலை மற்றும் சதை நிற அலகுடன் மிகவும் குறிப்பிடத்தக்கத் தோற்றத்தைக் கொண்டுள்ளது.

வாழிடம்

தொகு

இது தென் சூடான் மற்றும் வடக்கே எத்தியோப்பியாவிலிருந்து தெற்கே தென்னாப்பிரிக்கா வரை சகாரா கீழமை ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியில் இனப்பெருக்கம் செய்கிறது.

இது வறண்ட வெப்பமண்டல காடுகளில், குறிப்பாக அகாசியா மற்றும் பரந்த-இலைகள் கொண்ட வனப்பகுதிகள் மற்றும் அடர்த்தியான புதர் நிலங்களில் வாழ்கிறது.

நடத்தை மற்றும் சூழலியல்

தொகு

கறுந்தலை மாங்குயில் சிறிய பழங்கள் மற்றும் பெரிய பூச்சிகளை உண்ணும். குஞ்சுகளுக்கு பெரும்பாலும் கம்பளிப்பூச்சி உணவாக வழங்கப்படுகிறது.

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு