ஆப்பிரிக்கத் திரைப்படத்துறை

ஆப்பிரிக்கத் திரைப்படத்துறை (Cinema of Africa) என்பது ஆப்பிரிக்கா கண்டத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களையும் அதை சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறையை குறிக்கிறது.

1963 ஆம் ஆண்டு எகிப்தில் வெளியான சலாடின் தி விக்டோரியஸ் என்ற திரைப்படத்தின் சுவரொட்டி.

இந்த கண்டத்தில் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றது. இங்கு திரைப்பட ரீல்கள் பயன்பாட்டில் முதன்மை தொழில்நுட்பமாக இருக்கின்றது. ஆப்பிரிக்காவில் காலனித்துவ காலத்தில் மேற்கத்திய திரைப்பட தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட ஆப்பிரிக்கத் திரைப்படங்களில் கறுப்பினத்தவரை வேலைக்காரர்களாக மற்றும் எதிர்மறையான பாணியில் சித்தரித்தனர்.[1] அதன் பிறகு ஆப்பிரிக்கர்கள் தங்களுக்கான திரைப்படங்களை அவர்களே தயாரிக்க ஆரம்பித்தனர்.

ஆப்பிரிக்கத் திரைப்படத்துறையில் எகிப்திய நாட்டுத் திரைப்படத்துறை உலகின் மிகப் பழமையான துறை ஒன்றாகும்.[2][3] 1896 இல் லூமியேர் சகோதரர்கள் அலெக்ஸாண்ட்ரியா மற்றும் கெய்ரோவில் தங்கள் திரைப்படங்களைத் திரையிட்டனர். 1907 இல் எகிப்தியர்களால் முதல் குறும் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.[4]

ஆப்பிரிக்கத் திரைப்படத்துறையில் நைஜீரியா நாட்டுத் திரைப்படத்துறை மதிப்பு, வருடாந்திர படங்களின் எண்ணிக்கை, வருவாய் மற்றும் புகழ் ஆகியவற்றின் அடிப்படையில் மிக பெரிய துறையாகும். இது உலகின் இரண்டாவது பெரிய திரைப்பட தயாரிப்பாளர்களை கொண்ட துறை ஆகும்.[5][6] 2016 ஆம் ஆண்டில் நைஜீரியாவின் திரைப்படத்துறை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% பங்களித்தது.[7]

நாடு வாரியாக ஆப்பிரிக்கத் திரைப்படத்துறை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Hayward, Susan. "Third World Cinemas: African Continent" in Cinema Studies: The Key Concepts (Third Edition). Routledge, 2006. p. 426-442
  2. Leaman, Oliver (2003-12-16). Companion Encyclopedia of Middle Eastern and North African Film (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134662524.
  3. "Alexandria, Why? (The Beginnings of the Cinema Industry in Alexandria)". Bibliotheca Alexandrina's AlexCinema.
  4. "A Chronology of Firsts in Alexandria".
  5. "Nigeria surpasses Hollywood as world's second largest film producer – UN". United Nations. 2009-05-05. பார்க்கப்பட்ட நாள் 2013-03-26.
  6. "Nigeria's Nollywood eclipsing Hollywood in Africa". The Independent. May 15, 2010 இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924164506/http://www.independent.co.uk/arts-entertainment/films/nigerias-nollywood-eclipsing-hollywood-in-africa-1974087.html. பார்த்த நாள்: 2010-11-24. 
  7. "Spotlight: The Nigerian Film Industry" (PDF). July 2017.