ஆம்பலாப்பட்டு ஆறுமுகம்
ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் அல்லது ஆறுமுகம் மாதுரார் என்பவர் தொழிற்சங்கப் போராட்டவாதி, சமூக நீதி செயல்பாட்டாளர், தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடியவர். தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், ஆம்பலாப்பட்டு கிராமத்தில் பிறந்தார். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் அந்தக் காலகட்டத்தில் பண்ணையாட்கள் உரிமைக்காக, நிலவிய கொடுமைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களான வெங்கடேசன், பட்டுராசு, போன்றவர்களோடு இணைந்து போராடத் தொடங்கினார். [1][2]
மதுக்கூர் ஜமீன் ஆம்பலாப்பட்டு கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்த தமது மேய்ச்சல் , தரிசு நிலங்களையும் தனிநபருக்கு விற்றார். இதனை எதிர்த்து ஆறுமுகம், பொதுமக்களுடன் பெரும்போராட்டம் நடத்தினார். சுதந்திர இந்தியாவில் அடிமைப் பட்டுக் கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர் வெங்கடாசலம் என்கிற வாட்டாக்குடி இரணியன் இவருக்குத் துணையாக நின்றவர்கள் ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மற்றும் ஜாம்பவானோடை சிவராமன். புரட்சி செய்த மூவரையும் 1950 மே மாதம் சுட்டுக் கொன்ற காவல் துறையினர் அவர்களின் உடல்களை பட்டுக்கோட்டை ரயில்வே நிலையம் அருகேயுள்ள சுடுகாட்டில் தகனம் செய்தனர். அந்த இடத்தில் மூவரின் தியாகத்தை உணர்த்தும் விதமாக 1975-ம் ஆண்டு நினைவு ஸ்தூபி கட்டப்பட்டது.[3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vazhum Varalaru".
- ↑ "இன்னொரு முறை கொல்லப்பட்ட இரணியன்". ஆனந்த விகடன்.
- ↑ "நினைவு ஸ்தூபிக்கு". தினமணி.
- ↑ "தஞ்சை மாவட்ட களநாயகர்கள்". கீற்று.
- ↑ "கம்யூனிஸ்ட் கட்சியின் போராளிகள்". தமிழ்மணி செய்திகள்.