ஆம்பல் (மருந்து)
ஆம்பல் என்பது சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்து ஆகும். ஆம்பல் மலரின் இதழ், விதை, தண்டு, கிழங்கு என்பன அக்காலத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டன[1] போர்களின் போது போர் வீரர்களுக்கு ஏற்பட்ட வெட்டுக் காயத்திற்கு கருங்குழம்பைப் பூசி, நெருப்பில் கடுகையும் ஆம்பல் இதழ்களையும் இட்டு வரும் புகையை ஊதியதாகப் புறநானூற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன.
“ | கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி
ஐவி சிதறி ஆம்பல் ஊதி இசைமணி எறிந்து காஞ்சி பாடி நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ காக்கம் வம்மோ காதலம் தோழி! வேந்துறு விழுமம் தாங்கிய பூம் பொறிக்கழல் கால் நெடுந்தகைப் புண்ணே”[2] |
” |
இன்றும் நம் நாட்டு மருத்துவத்தில் தென்னங் குருத்து, வேம்பு, புளி, நெல்லி இவற்றின் இலைகளும், அல்லி, தாமரை, குவளை, செவ்வாழைப் பூக்களும் சிரங்கு, கரப்பன், தொழுநோய் (குட்டம்) போன்ற பல தோல் நோய்களுக்கும் புண்களுக்கும் இவற்றின் புகை ஊதப்படுகிறது.[1] இவற்றின் புகை கெட்ட ஆவிகளைப் போக்கும் என்ற நம்பிக்கையும் அக்காலத்தே இருந்துள்ளது.[3]