ஆம்பி பள்ளத்தாக்கு நகரம்
ஆம்பி பள்ளத்தாக்கு நகரம் ( Aamby Valley City ) என்பது இந்தியாவின் புனேவின் புறநகரில் உள்ள சஹாரா இந்தியா பரிவார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நகரமாகும்.
ஆம்பி பள்ளத்தாக்கு நகரம் Aamby Valley City | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 18°36′34″N 73°23′14″E / 18.60939°N 73.38725°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
நகரம் | புனே |
அரசு | |
பரப்பளவு | |
• மொத்தம் | 43 km2 (17 sq mi) |
ஏற்றம் | 700 m (2,300 ft) |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
வாகனப் பதிவு | MH 12, MH 14 |
அருகிலுள்ள நகரம் | லோணாவ்ளா |
இணையதளம் | www |
கட்டுமானம்
தொகு2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நகரம், மேற்குத் தொடர்ச்சி மலையின் சக்யாத்ரி மலைகளில் 10,600 ஏக்கர் (4,300 ஹெக்டேர்) மலைப்பாங்கான நிலப்பரப்பில் பரவியுள்ளது.[1] இது லோனாவாலாவிலிருந்து சுமார் 23 கிமீ , புனே நகரத்திலிருந்து 87 கிமீ மற்றும் மும்பை நகரத்திலிருந்து 120 கிமீ தொலைவில் உள்ளது.[2] இந்த நகரம் லோனாவாலா சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் ஒரு விமான ஓடுபாதை உள்ளது. அது 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் செயல்படுவதை நிறுத்தியது. ஜூன் முதல் செப்டம்பர் வரை ஆண்டுக்கு சராசரியாக 4,000 மிமீ (160 அங்குலம்) அளவிற்கு இங்கு மழைப்பொழிவு இருக்கும்.
இந்தியாவின் பெரும் செல்வந்தர்களுக்கு சந்தைப்படுத்தப்பட்ட இந்த நகரம் ஐந்து கட்டங்களாக உருவாக்கப்பட்டது. இது 2003 ஆம் ஆண்டில் குரூன்-பாபி முகர்ஜி & அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு திட்டம் உருவாக்கப்பட்டது.[3] இந்நிறுவனம் சகாரா மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமானது. இதில் ₹ 5 கோடி முதல் ₹ 20 கோடி வரை விலையுள்ள 600-800 ஆடம்பர வீடுகள் உள்ளன.
இங்கு மூன்று பெரிய ஏரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மிகப்பெரிய ஏரி ஒன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த நகரம் 10,600 ஏக்கர் (4,300 ஹெக்டேர்) மற்றும் லோனாவாலா அருகே பத்து கிராமங்களில் பரவியுள்ளது. மேலும் ஒரு விமான ஓடுதளம், வணிக வளாகங்கள், 256 ஏக்கர் பரப்பிலான குழிப்பந்தாட்ட மைதானம், துணை மின் நிலையம், சிறிய அணைகள், ஒரு சர்வதேசப் பள்ளி மற்றும் ஒரு மருத்துவமனை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[4][5] இந்த நகரத்தில் பல ஆடம்பர உணவகங்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக வாரணாசியிலுள்ள படித்துறைகள் போன்ற செயற்கை கடற்கரையும் உள்ளது.[6]
2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், குழிப்பந்தாட்டம் மைதானம் மற்றும் விமான ஓடுபாதை செயல்படுவதை நிறுத்தியது.
நிதி சிக்கல்கள்
தொகுநிறுவப்பட்டதிலிருந்து இந்த நகரம் பல்வேறு நிதி மற்றும் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டது.[7] நான்கு சகாரா கூட்டுறவுச் சங்கங்கள் விதிமுறைகளை மீறி 62,643 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.[8][9] நைட் ஃபிராங்க் இந்தியா அறிக்கையை மேற்கோள் காட்டி, சகாரா குழுமம் 2014 ஆம் ஆண்டில் ஆம்பி பள்ளத்தாக்கு திட்டத்தின் மதிப்பு சுமார் 1 டிரில்லியன் டாலர் (14.76 பில்லியன் டாலர்) என அறிக்கை வெலியிட்டது.[10][11][8]
2016 ஆம் ஆண்டில், முல்ஷியின் வட்டாட்சியர், வரிகளை செலுத்தாததற்காக நகரின் நுழைவாயிலில் மூடினார். சகாரா குழுமம் ₹ 2.53 கோடியை செலுத்திய அதே நாளில் நகரம் மீண்டும் திறக்கப்பட்டது.[12][13][14]
விற்பனை நடவடிக்கைகள்
தொகுநிறுவனம் முதலீட்டாளர்களை ஏமாற்றியதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக 14,000 கோடி ரூபாயை மீட்டெடுக்க ஏப்ரல் 2017 இல், இந்திய உச்ச நீதிமன்றம் ஆம்பி பள்ளத்தாக்கு திட்டத்தை ஏலம் விட உத்தரவிட்டது.[6][15][16] நீதிமன்றம் 37,000 கோடி ரூபாய்க்கு அதிக இருப்பு விலையை நிர்ணயித்தது. இறுதியில் இரண்டு முறை ஏலங்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் எவரும் வாங்குபவர்கள் இல்லை.[6][9][17][18][19] ஜூலை 2018 இல், உச்ச நீதிமன்றம் ஏலத்தை ஒத்திவைத்து, சகாரா பரிவாரின் கட்டுப்பாட்டில் நகரத்தை அனுமதிக்க அனுமதித்தது.[20][21] 2019 ஆம் ஆண்டில், நீதிமன்றம் ஏலத்தைத் தொடர முடிவு செய்தது.[22]
ஜனவரி 2020 இல், உச்ச நீதிமன்றம் ஆம்பி பள்ளத்தாக்கை நிர்வகிக்கவும், ஒரு புதிய ஏலத்தை ஆராயவும் ஒரு அலுவலரை நியமித்தது.[23]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Aamby Valley Ltd - Company Profile and News" (in ஆங்கிலம்). Bloomberg News. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
- ↑ Hakim, Sharmeen (December 1, 2017). "Sahara case: Once a place for India's richest to unwind, Amby Valley is now deserted" (in en). Mumbai Mirror. https://mumbaimirror.indiatimes.com/mumbai/cover-story/shabby-valley/articleshow/61871538.cms.
- ↑ "HOT 100 2017: Bobby Mukherji & Associates". Architect and Interiors India. 8 May 2019. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
- ↑ "Five Facts About Sahara Group’s Aamby Valley Project Which Is On Auction". Moneycontrol.com. August 18, 2017. https://www.moneycontrol.com/news/business/real-estate/five-facts-about-sahara-groups-aamby-valley-project-which-is-on-auction-2363895.html.
- ↑ Singh, Paarth (9 August 2020). "At par" (in en). Deccan Herald. https://www.deccanherald.com/sunday-herald/sh-top-stories/at-par-870964.html.
- ↑ 6.0 6.1 6.2 Sinha, Bhadra (17 April 2017). "Blow to Sahara, SC orders auction of Aamby Valley" (in en). Hindustan Times. https://www.hindustantimes.com/india-news/blow-to-sahara-sc-orders-auction-of-aamby-valley/story-EUilmHFoM4hzKAVXM0LQeP.html.
- ↑ Joshi, Yogesh (7 February 2017). "Sahara’s Aamby Valley: A dream city caught in legal quagmire" (in en). Hindustan Times. https://www.hindustantimes.com/india-news/sahara-s-aamby-valley-a-dream-city-caught-in-legal-quagmire/story-gIvUCUZAFk2XwtvW6p993I.html.
- ↑ 8.0 8.1 Narayan, Khushboo; Kulkarni, Sushant (7 September 2020). "Aamby Valley in Sahara probe: Over Rs 62,000 cr depositors’ cash in loss-making firm" (in en). The Indian Express (Mumbai, Pune). https://indianexpress.com/article/business/companies/aamby-valley-in-sahara-probe-under-scanner-over-rs-62000-cr-depositors-cash-in-loss-making-firm-6585812/.
- ↑ 9.0 9.1 Khanna, Sundeep (19 September 2017). "Low interest in Aamby Valley auction shows limitations of private cities" (in en). Mint. https://www.livemint.com/Opinion/FTG2vdVVnuKRapsDNMpUWK/Low-interest-in-Aamby-Valley-shows-limitations-of-private-ci.html.
- ↑ "Sahara’s Aamby Valley struggles to stay afloat" (in en). Deccan Chronicle. Reuters. 1 February 2016. https://www.deccanchronicle.com/business/companies/010216/sahara-s-aamby-valley-struggles-to-stay-afloat-banks-on-small-savers.html.
- ↑ Subramanian, N. Sundaresha (27 April 2017). "Number crunching: Just how much is Sahara's Aamby Valley worth?". Business Standard India. https://www.business-standard.com/article/companies/number-crunching-just-how-much-is-sahara-s-aamby-valley-worth-117042600728_1.html.
- ↑ "Sahara’s Aamby Valley sealed over non-payment of dues" (in en). Hindustan Times. 1 March 2016. https://www.hindustantimes.com/business/sahara-s-aamby-valley-sealed-over-non-payment-of-dues/story-i9R4zOj7qsGF7HYMoVgNFI.html.
- ↑ "Aamby Valley sealed, reopened after Sahara Group pays tax dues". The Economic Times. PTI. March 1, 2016. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/aamby-valley-sealed-reopened-after-sahara-group-pays-tax-dues/articleshow/51214063.cms.
- ↑ Mehta, Tejas (March 1, 2016). "Sahara's Aamby Valley Reopens After Being Sealed For Hours". NDTV. https://www.ndtv.com/india-news/aamby-valley-sealed-another-blow-for-subrata-roy-1282849.
- ↑ Chaturvedi, Arpan (November 23, 2017). "Supreme Court Orders Fresh Auction Of Aamby Valley Property" (in en). Bloomberg Quint. https://www.bloombergquint.com/law-and-policy/supreme-court-orders-fresh-auction-of-aamby-valley-property.
- ↑ "Office of Official Liquidator: Mumbai High Court" (PDF). 14 August 2017. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
- ↑ "Aamby Valley auction process begins at Rs37,000 crore reserve price" (in en). Live Mint. PTI. 14 August 2017. https://www.livemint.com/Politics/IPqtmE9F1YusbEgO23807I/Sahara-Groups-Aamby-Valley-auction-process-begins-at-Rs37-c.html.
- ↑ "Aamby Valley auction said to attract just two bidders" (in en). Live Mint. PTI. 17 September 2017. https://www.livemint.com/Companies/ivs2yudAY4etennywClb0K/Just-two-potential-bidders-for-Rs37000-crore-Aamby-Valley-a.html.
- ↑ "No takers for Sahara's Aamby Valley properties: Official liquidator tells SC" (in en). DNA India. PTI. 12 July 2018. https://www.dnaindia.com/business/report-no-takers-for-sahara-s-aamby-valley-properties-official-liquidator-tells-sc-2636353.
- ↑ Prakash, Satya. "Sahara saves Aamby Valley as no buyer turns up" (in en). The Tribune. https://www.tribuneindia.com/news/archive/nation/sahara-saves-aamby-valley-as-no-buyer-turns-up-619378.
- ↑ Joshi, Yogesh (25 July 2018). "Sahara regains control of Aamby Valley, Roy assures normalcy to staff" (in en). Hindustan Times. https://www.hindustantimes.com/pune-news/sahara-regains-control-of-aamby-valley-roy-assures-normalcy-to-staff/story-5DTvswT9soVCDWMloFddTI.html.
- ↑ "Auction process of Sahara's Aamby Valley property to continue: SC" (in en). Deccan Herald. PTI. 16 May 2018. https://www.deccanherald.com/national/west/auction-process-of-saharas-aamby-valley-property-to-continue-sc-670241.html.
- ↑ Subramanian, N. Sundaresha (24 November 2017). "SC appoints official receiver to manage Aamby Valley". Business Standard India. https://www.business-standard.com/article/companies/supreme-court-appoints-official-receiver-to-manage-aamby-valley-117112300734_1.html.