சகாரா இந்தியா பரிவார்

சகாரா இந்தியா பரிவார் (Sahara India Pariwar) இந்தியாவில் இலக்னோ நகரத்தில் தலைமையகம் கொண்டுள்ள ஒரு கூட்டு நிறுவனம். சுப்ரதா ராய் இந்நிறுவனத்தின் அதிபர். இந்தியாவில் இரண்டாம் மிகப்பெரிய பணியமர்த்துகிற நிறுவனம் சகாரா என்று 2004இல் டைம் இதழ் தெரிவித்துள்ளது. 2011இல் 73,000 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது.

சகாரா பரிவார்
Sahara Pariwar
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை1978 (கோரக்பூர், இந்தியா)
நிறுவனர்(கள்)சுப்ரதா ராய் சகாரா
தலைமையகம்இலக்னோ, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்சுப்ரதா ராய், (தலைவர்)
தொழில்துறைபல்-துறை
உற்பத்திகள்நிதிச் சேவைகள்
கட்டுமானம்
பெருந்திரள் ஊடகம்
சில்லறை வணிகம்
ஒப்பந்த சேவை அமர்த்தம்
வருமானம்730 பில்லியன் (2011)[1]
இணையத்தளம்www.sahara.in

இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியை சகாரா விளம்பர ஆதரவு அளிக்கிறது. 2013 வரை இந்தியத் துடுப்பாட்ட அணியையும் சகாரா விளம்பர ஆதரவு அளித்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாரா_இந்தியா_பரிவார்&oldid=1625860" இலிருந்து மீள்விக்கப்பட்டது