ஆயர் குரோ ஏரி

ஆயர் குரோ ஏரி (மலாய்: Tasik Air Keroh; ஆங்கிலம்: Air Keroh Lake); என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில், மத்திய மலாக்கா மாவட்டத்தில் (Melaka Tengah District) அமைந்துள்ள ஓர் ஏரியாகும். மலாக்கா மாநகரத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

ஆயர் குரோ ஏரி
அழகிய ஆயர் குரோ ஏரி
ஆயர் குரோ ஏரி is located in மலேசியா
ஆயர் குரோ ஏரி
ஆயர் குரோ ஏரி
அமைவிடம்ஆயர் குரோ, மலாக்கா, மலேசியா
ஆள்கூறுகள்2°16′00″N 102°17′00″E / 2.266667°N 102.283333°E / 2.266667; 102.283333
வகைஇயற்கை ஏரி
பூர்வீக பெயர்Air Keroh Lake Error {{native name checker}}: parameter value is malformed (help)
வடிநில நாடுகள்மலேசியா
மேற்பரப்பளவு15 km2 (5.8 sq mi)

இது ஓர் அமைதியான இயற்கை ஏரி. இங்கு படகோட்டம், படகு சவாரி, மீன்பிடித்தல் போன்ற பல்வேறு பொழுது போக்குச் செயல்பாடுகள் வழங்கப் படுகின்றன. ஏரிக் கரையில் விளையாட்டு மைதானம் மற்றும் உணவுக் கடைகளும் உள்ளன.[2]

அமைவு தொகு

கோலாலம்பூர் மாநகரில் இருந்து 134 கி.மீ. தொலைவிலும், மலாக்கா மாநகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. தீபகற்ப மலேசியா, வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா), ஆயர் குரோ நுழைவுச் சாவடியில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில் இருக்கிறது.

இந்த ஏரிக்கு அருகில் இரவு விலங்கியல் பூங்கா எனும் சுற்றுலாக் கவர் நிகழ்ச்சியும் இரவு நேரங்களில் நடைபெற்று வருகிறது. இரவு சார் விலங்குகளின் நடமாட்டத்தை அந்த நிகழ்ச்சியில் காண முடியும்.[3]

முதலைகள் பண்ணை தொகு

இங்குள்ள தாமான் புவாயா எனும் முதலைகள் பண்ணை (Taman Buaya), உலக தேனீக்கள் அருங்காட்சியகம் (World Bees Museum) போன்றவை, பொழுதுபோக்குச் சார்ந்த உயிரியல் பூங்காக்களாக விளங்குகின்றன.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும், குட்டி மலேசியா (Mini Malaysia), குட்டி ஆசியான் (Mini ASEAN), மலாக்கா வண்ணத்துப் பூச்சி - ஊர்வன காப்பகம் (Malacca Butterfly & Reptile Sanctuary), விலங்கியல் பூங்கா போன்றவை பிரசித்தி பெற்றவை.[4]

மேற்கோள்கள் தொகு

மேலும் காண்க தொகு

மலேசிய ஏரிகளின் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயர்_குரோ_ஏரி&oldid=3427984" இருந்து மீள்விக்கப்பட்டது