ஆரணி ஆறு
ஆரணி ஆறு (Arani River) கிருஷ்ணா ஆற்றின் கிளையாறாக திருவள்ளூர் மாவட்டம் போன்ற வடதமிழகத்தில் பாயும் ஆறாகும்.[1][2]
தோற்றம்
தொகுகிருஷ்ணா ஆறு ஊத்துக்கோட்டையின் வழியாக தமிழ்நாட்டினுள் நுழைந்து கொடுதலை ஆறு மற்றும் ஆரணி ஆறு என்று இரண்டாகப் பிரிகிறது. கொடுதலை ஆற்றுநீர் சோழவரம் ஏரியில் சேமிக்கப்பட்டு கோடைகாலத்தில் சென்னையின் குடிநீராக பயன்படுத்தப்பட்டு, மீதமுள்ள தண்ணீர் காரனோடை பாலம், நாபாளத்து பாலம் வழியாக வங்கக்கடலில் சென்று கலக்கிறது.
ஆரணி ஆறு பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி, பெரும்பேடு வழியாகச் சென்று பழவேற்காடு அருகே வங்கக்கடலில் கலக்கிறது. பொன்னேரி அடுத்துள்ள ஆலாடு எனும் இடத்தில் ஆரணி ஆற்றின் குறுக்காக அணை கட்டி தண்ணீரை சேமித்து சுற்றிலுமுள்ள விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
ஆரணி அணை
தொகுஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் 2,230 ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக 1958 ஆம் ஆண்டு 49 மில்லியன் கன மீட்டர் நேரடி சேமிப்புத் திறன் கொண்ட ஆர்னியார் அணை கட்டப்பட்டது. [3]
நதிக்கரை கோயில்கள்
தொகுஆரணி ஆறு, புனித ஆறாகவும் கருதப்படுகிறது. இவ்வாற்றின் கரையில் உள்ள
- ஆரணி சம்ங்கி பிச்சாலிஸ்வரர் கோவில்
- சோடேஸ்வரி கோவிலும்,
- பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், பாபஹரேஸ்வரர் கோயில் .[4]
- பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோவில்
- பொன்னேரி கரிகிருஷ்ணா பெருமாள் திருக்கோவில்..
ஆகிய கோயில்கள் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை
- ↑ பொன்னேரி வலைப்பதிவு
- ↑ "Araniar Project D01858". பார்க்கப்பட்ட நாள் 19 July 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ தினமலர் பாபஹரேஸ்வரர் திருக்கோயில்