ஆரிசு சால்வே
ஆரிசு சால்வே (Harish Salve 22 சூன் 1955)என்பவர் இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் மேனாள் சொலிசிட்டர் செனரல் ஆவர். அரசியல் விவகாரங்கள், வணிகம், வரி விதிப்புச் சிக்கல்கள், நீதி நியாய வழக்குகள் ஆகியவற்றில் உச்சநீதி மன்றத்திலும் பிற உயர்நீதி மன்றங்களிலும் வழக்குகளில் வாதிட்டு வருகிறார்.[1]
ஆரிசு சால்வே | |
---|---|
பிறப்பு | 2 அக்டோபர் 1933 (அகவை 91) நாக்பூர் |
படித்த இடங்கள் | |
பணி | வழக்கறிஞர் |
விருதுகள் | பத்ம பூசண் |
குடும்பப் பின்னணி
தொகுஆரிசு சால்வே மராத்திக் குடும்பத்தில் நாக்பூர்இல் பிறந்தார். இவருடைய பாட்டனார் பி.கே சால்வே கிரிமினல் வழக்கறிஞராக இருந்தவர். இவருடைய தந்தையார் என்.கே.பி. சால்வே பட்டயக் கணக்காளர் தொழில் செய்து வந்ததோடு இந்தியத் தேசியக் காங்கிரசு கட்சியிலும் இருந்தார். ஆரிசு சால்வே பட்டயக் கணக்காளர் தகுதி பெற்றாலும் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார். நானி பல்கிவாலாவின் தொடர்பு இவரின் வாழ்வில் ஓர் உந்துதலாக இருந்தது. ஆரிசு சால்வே சோலி சொராப்ஜி என்னும் மேனாள் சொலிசிட்டர் செனரலிடம் பணி செய்துள்ளார்.
வழக்கறிஞர் பணிகள்
தொகு1992 இல் சீனியர் கவுன்சில் பதவிக்கு உச்ச நீதிமன்றம் இவரை அமர்த்தியது. 1999இல் சொலிசிட்டர் செனரலாக அமர்த்தப்பட்டார். இரண்டாவது முறையும் இவர் அமர்த்தப்பட்டபோது இவர் அப்பதவியை ஏற்கவில்லை.
வாதிட்ட வழக்குகள்
தொகுடாட்டா ஆண்டு சன்ஸ், என்டிவி, வோடபோன், ரிலையன்சு இன்டஸ்டிரிஸ் போன்ற பெருங்குழுமங்கள் சார்பாக நீதிமன்றங்களில் வாதிட்டார். பாலிவுட் நடிகர் சல்மான் கான் வழக்கிலும் சல்மான் கான் சார்பாக வாதடினார்.
கிருட்டிணா கோதாவரி வழக்கிலும், பன்னாட்டு நீதி மன்றத்தில் நடைபெற்ற குல்பூசண் ஜாதவ் வழக்கிலும் வாதிட்டு வெற்றி பெற்றார். குல்பூசண் ஜாதவ் வழக்கில் ஒரே ஒரு ரூபாய் மட்டும் கட்டணமாகப் பெற்றார்.[2]