ஆரோக்ய ராஜீவ்

(ஆரோக்கிய இராஜீவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆரோக்கியா ராச்சீவ் (Arokia Rajiv) 400 மீட்டர் தூர ஓட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஓர் இந்திய தடகள வீர்ராவார். 1991 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாள் இவர் பிறந்தார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் மற்றும் கலப்பு 4 × 400 மீ தொடர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். 2014 இல் 400 மீட்டர் தனிநபர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், 2017 ஆசிய சாம்பியன் பட்டப் போட்டிகள் இரண்டிலும் 400 மீ மற்றும் 4 × 400 மீ இரண்டிலும் பதக்கங்களை வென்றார். 2016 கோடைகால ஒலிம்பிக்கில் தொடர் ஓட்டத்தில் போட்டியிட்டார் [1].

சௌந்தர்ராஜன் ஆரோக்கிய ராஜீவ்
தனித் தகவல்கள்
முழுப் பெயர்Soundararajan Arokia Rajiv சவுந்தர்ராஜன் ஆரோக்கிய இராஜீவ்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்22 மே 1991 (1991-05-22) (அகவை 33)
பிறந்த இடம்திருச்சி
வசிப்பிடம்திருச்சி தமிழ்நாடு, இந்தியா
உயரம்175 செ.மீ.
எடை65 கி.கி.
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுஓட்டப்பந்தயம் Track and field
நிகழ்வு(கள்)400 மீட்டர்
4*400 மீட்டர்
சாதனைகளும் பட்டங்களும்
மிக உயர்ந்த உலகத் தர வரிசைஆண்களுக்கான 400மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம்
 
பதக்கங்கள்
ஆண்கள் ஓட்டப்பந்தயம்
நாடு  இந்தியா
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 தென்கொரியா | ஆண்களுக்கான 400மீட்டர்|வெண்கலம் {{{2}}}
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் [[2017 ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகள் |2017 புவனேஸ்வர்| ஆண்களுக்கான 400மீட்டர்|வெள்ளி]] {{{2}}}


பிறப்பு

தொகு

ஆரோக்ய ராஜீவ் இந்தியாவின் தமிழ்நாடு திருச்சி மாவட்டம் இலால்குடியைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை திருச்சி, இலால்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,கல்லூரிப் படிப்பை புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி யிலும் பயின்றார்.

விளையாட்டு

தொகு

ராஜீவ் தனது இளமைக் காலத்தில் நீளம் தாண்டுதலில் ஆர்வம் காட்டினார். பின் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்தினார்.[1] 2019 ஆசிய சாம்பியன்ஷிப்பில், இவர் 4 வது இடத்தைப் பிடித்தார், இறுதிப் போட்டியில் 45.37 வினாடிகள் எடுத்தார். [2] இது 2014 செப்டம்பர் 28 அன்று இஞ்சியோனில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் சாதித்ததபோது, எடுத்த நேரமான 45.92 வினாடிகளை விட சிறந்தது.[3] 2011 மார்ச் 15 அன்று இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் 8 வது பட்டாலியனில் சேர்ந்தார். சுபேதார் அரோக்கியா ராஜீவ் 2017 ஆம் ஆண்டில் தடகளத்தில் சிறப்பாக விளையாடியதற்காக இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் மதிப்புமிக்க அர்ஜுனா விருதை அளித்து இவரை கௌரவித்தார். இந்தியாவின் கால்பந்து கோல்கீப்பராக செய்த சிறந்த சாதனைகளுக்காக விருது பெற்ற ஹவில்தார் பீட்டர் தங்கராஜுக்குப் அடுத்து மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் இருந்து இரண்டாவதாக அர்ஜுனா விருது பெற்றவராக ராஜீவ் உள்ளார். [4]

சாதனைகள்

தொகு
ஆண்டு போட்டி இடம் நிலை நிகழ்வு குறிப்புகள்
ஆரோக்கிய ராச்சீவ்  இந்தியா
2013 ஆசிய சாம்பியன் பட்டப் போட்டிகள்]] இந்தியா பூனா 6 ஆவது 400 மீ 46.63
4 ஆவது 4 × 400 மீ தொடர் ஓட்டம் 3:06.01
2014 2014 ஆசிய விளையாட்டுகள் தென்கொரியா, இன்சியோன் வெண்கலம் 400 மீ 45.92]]
4 ஆவது 4 × 400 மீ தொடர் ஓட்டம் 3:04.61]]
2017 2017 ஆசிய தடகள சாம்பியன் பட்டப் போட்டி இந்தியா, புவனேசுவர்   400 மீ 46.14
  4 × 400 m relay 3:02.92
2018 2018 பொதுநலவாய விளையாட்டுகள் கோல்டு கோசுட், ஆத்திரேலியா எச்2- 2 ஆவது 4 × 400 மீ தொடர் ஓட்டம் 3:04.051

1 இறுதிப் போட்டியில் ஓடி முடிக்கவில்லை

மேற்கோள்கள்

தொகு
  1. http://senpakam.org/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D/[தொடர்பிழந்த இணைப்பு]
  1. https://senpakam.org/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5/[தொடர்பிழந்த இணைப்பு]
  1. http://www.maalaimalar.com/News/Sports/2017/08/23042625/1103895/Heres-detail-of-National-Sports-Awards--2017.vpf
  2. http://results.glasgow2014.com/athlete/athletics/1026639/arokia_rajiv.html
  3. https://www.iaaf.org/athletes/india/arokia-rajiv-284913

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரோக்ய_ராஜீவ்&oldid=3634889" இலிருந்து மீள்விக்கப்பட்டது