ஆர்எச்பி வங்கி
ஆர்எச்பி வங்கி அல்லது ரசீட் உசேன் வங்கி (MYX: 1066) (மலாய்: Bank RHB; ஆங்கிலம்: RHB Bank Berhad அல்லது Rashid Hussain Bank); என்பது மலேசியா, கோலாலம்பூரில் தலைமையிடமாகக் கொண்டு 1994-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட வங்கி ஆகும்.
வகை | அரசாங்கத்திற்கு சொந்தம் |
---|---|
நிறுவனர்(கள்) | ரசீட் உசேன் Rashid Hussain |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
முதன்மை நபர்கள் | |
தொழில்துறை | நிதி சேவைகள் |
உற்பத்திகள் | சில்லறை வங்கி கார்ப்பரேட் வங்கி முதலீட்டு வங்கி இசுலாமிய வங்கி சொத்து மேலாண்மை காப்பீடு & தக்காபுல் |
வருமானம் | ▼ RM10.829 Billion (Fiscal Year Ended 31 December 2020)[1] |
இயக்க வருமானம் | RM 3.798 பில்லியன் (31 December 2020)[1] |
நிகர வருமானம் | ▼ RM 2.039 பில்லியன் (31 December 2020)[1] |
மொத்தச் சொத்துகள் | RM 271.149 பில்லியன் (31 December 2020)[1] |
மொத்த பங்குத்தொகை | ▼ RM 27.056 பில்லியன் (31 December 2020)[1] |
பணியாளர் | 14,000 (2022)[2] |
தாய் நிறுவனம் | மலேசிய ஊழியர் சேமநிதி (Employees Provident Fund Malaysia) |
இணையத்தளம் | www |
மலேசியாவின் மிகப்பெரிய வங்கிகளில் இதுவும் ஒன்றாகும். மலேசியாவில் 180-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. மற்றும் தனிநபர்கள், சிறு வணிகங்கள் மற்றும் உயர்மட்ட வணிக நிறுவனங்களுக்கு பலவகையான வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது.[3].
பொது
தொகுமலேசியாவில், இசுலாமிய வங்கிச் சேவைகளை வழங்கி வரும் சில வங்கிகளில் ஆர்எச்பி வங்கியும் ஒன்றாகும். அதன் துணை நிறுவனமான ஆர்எச்பி இசுலாமிய வங்கி (RHB Islamic Bank Berhad) மூலமாக அந்தச் சேவைகளை வழங்கி வருகிறது.
ஆர்எச்பி வங்கி மலேசியப் பங்குச் சந்தையில் (Bursa Malaysia) பட்டியலிடப்பட்டு உள்ளது. 2022 ஆகத்து மாத நிலவரப்படி RM 24.77 பில்லியன் மூலதனத்தைக் கொண்டுள்ளது.
வரலாறு
தொகுஆர்எச்பி வங்கி என்பது ஆர்எச்பி கெப்பிட்டல் (RHB Capital) நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். ஆர்எச்பி வங்கி மூன்று வங்கிகளின் இணைப்புகளில் உருவானது.
- 1997 - குவாங் யிக் வங்கி (Kwong Yik Bank Berhad)
- 1999 - சைம் வங்கி (Sime Bank Berhad)
- 2003 - உத்தாமா வங்கி - (Bank Utama Malaysia)
மூன்று வங்கிகளின் இணைப்புகள் வரலாறு
தொகு- குவாங் யிக் வங்கி (Kwong Yik Bank) 1913-இல் கோலாலம்பூரில் நிறுவப்பட்டது. இது மலாயாவின் முதல் உள்ளூர் வங்கியாகும். வங்கியின் இணை நிறுவனர்களில் சான் விங், சியோங் யோக் சோய், லோக் யூ ஆகியோர் அடங்குவர்.[4]
- 1997-இல், குவாங் யிக் வங்கி; டிசிபி வங்கியுடன் (DCB Bank) இணைக்கப்பட்டது. அந்த நேரத்தில் நாட்டின் மிகப்பெரிய வங்கி இணைப்பாக அது அமைந்தது.
- யுனைடெட் மலாயன் கார்ப்பரேசன் வங்கி ("United Malayan Banking Corporation") 1959-இல் நிறுவப்பட்டது. மலாயாவில் முதல் வணிக வங்கியாக மாறியது. இது அதிகாரப் பூர்வமாக 1960-இல் திறக்கப்பட்டது.
- 1996-இல், யுனைடெட் மலாயன் கார்ப்பரேசன் வங்கி; சைம் டார்பி வங்கியின் (Sime Darby Bank) ஒரு பகுதியாக மாறியது. சிம் பெர்காட் வங்கி (Sime Bank Berhad) என மறுபெயரிடப்பட்டது. 1999-இல், சிம் பெர்காட் வங்கி; ஆர்எச்பி வங்கியுடன் இணைக்கப்பட்டது.
- பேங்க் உத்தாமா (Bank Utama) 1976-இல் உருவாக்கப்பட்டது. 1998-இல் பேங்க் உத்தாமா; கெவாங்கான் உத்தாமா பெர்காட் வங்கியுடன் (Kewangan Utama Berhad) இணைக்கப்பட்டது. 2003-இல், ஆர்எச்பி வங்கி; பேங்க் உத்தாமா வங்கியுடன் இணைக்கப்பட்டது.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "RHB Bank Berhad 2020 Annual Report". RHB Group. 31 December 2021. பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
- ↑ "Who We Are". www.rhbgroup.com. RHB Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2022-05-20.
- ↑ Khor, Neil (2019). Loke Yew : A Malayan Pioneer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9671758601.
- ↑ Khor, Neil (2019). Loke Yew : A Malayan Pioneer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9671758601.