ஆர்த்தோ-தொலுயிக் அமிலம்
ஆர்த்தோ-தொலுயிக் அமிலம் (o -Toluic acid) என்பது (CH3)C6H4(COOH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் கார்பாக்சிலிக் அமிலம் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. பாரா, மெட்டா - தொலுயிக் அமிலங்களின் மாற்றியன் ஆர்த்தோ-தொலுயிக் அமிலமாகும். 2-மெத்தில்பென்சாயிக் அமிலம் என்ற பெயராலும் இச்சேர்ம்ம் அழைக்கப்படுகிறது. ஆர்த்தோ-தொலுயிக் அமிலத்தை தூய்மையாக்கி மறுபடிகமாக்கும்போது ஊசிவடிவப் படிகங்களாக மாறுகிறது. 1904 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவரான சர் வில்லியம் இராம்சே முதன்முதலில் ஆர்த்தோ-தொலுயிக் அமிலத்தைக் கண்டுபிடித்தார்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-Methylbenzoic acid | |||
வேறு பெயர்கள்
ஆர்த்தோ-தொலுயிக் அமிலம்
| |||
இனங்காட்டிகள் | |||
118-90-1 | |||
ChEBI | CHEBI:36632 | ||
ChEMBL | ChEMBL114957 | ||
ChemSpider | 8070 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C07215 | ||
பப்கெம் | 8373 | ||
| |||
பண்புகள் | |||
C8H8O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 136.2 கி/மோல் | ||
அடர்த்தி | 1.06 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 104 முதல் 105 °C (219 முதல் 221 °F; 377 முதல் 378 K) | ||
கொதிநிலை | 259 °C (498 °F; 532 K) | ||
-80.83•10−6செ.மீ3/மோல் | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
ஆர்த்தோ-சைலீனுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதால் ஆர்த்தோ-தொலுயிக் அமிலம் உருவாகிறது [2].
மேற்கோள்கள்
தொகு- ↑ O-TOLUIC ACID - Compound Summary, PubChem.
- ↑ Harold E. Zaugg, Richard T. Rapala (1947). "o-Toluic Acid". Org. Synth. 27: 84. doi:10.15227/orgsyn.027.0084.