ஆர்ஸ்லி குன்று
ஆர்ஸ்லி குன்று அல்லது ஆர்ஸ்லிகொண்டா அல்லது யெனுகுல்லா மல்லம்மா கொண்டா என்பது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தின் மதனப்பள்ளி வட்டத்தில் உள்ள மலைகளின் தொடர் ஆகும். இந்த மலைவாழிடம் மதனப்பள்ளி நகரத்திலிருந்து சுமார் 9 மைல் தொலைவில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் வசித்த, யானைகளால் (யெனுகுலு) உணவளிக்கப்பட்ட மல்லம்மா என்ற புனிதமிக்க வயதான பெண் குறித்த தொன்மக்கதையின் அடிப்படையில், இம்மலைவாழிடத்தின் உள்ளூர் பெயர் யெனுகு மல்லமா கொண்டா ஆகும். டபுள்யூ.டி ஆர்ஸ்லி (ஆங்கிலம்: W.D. Horsley), ஒரு பிரித்தானிய ஆட்சியாளர் ஆவார். இவர் 1870 ஆம் ஆண்டில் இங்கு தனது வீட்டைக் கட்டினார். இவர் பெயராலேயே இது பெயரிடப்பட்டது. வறண்ட மற்றும் வெப்பமான சுற்றுப்புறத்திற்கு மாறாக, இந்தப் பகுதி குளிர்ந்த காலநிலையுடன் அடர்ந்த தாவரங்களையும் கொண்டுள்ளது. நாளடைவில் இது ஒரு கவர்ச்சிமிக்க மலை வாழிடமாகவும், சுற்றுலாத் தலமாகவும் மாறியது. [1]
ஆர்ஸ்லி குன்று
யெனுகுல்லா மல்லம்மா கொண்டா | |
---|---|
நகரியம் | |
அடைபெயர்(கள்): ஆந்திர பிரதேசத்தின் ஊட்டி | |
ஆள்கூறுகள்: 13°40′N 78°24′E / 13.66°N 78.40°E | |
Country | இந்தியா |
State | ஆந்திர பிரதேசம் |
தோற்றுவித்தவர் | டபுள்யூ.டி.ஆர்ஸ்லி |
அரசு | |
• வகை | ஆந்திர பிரதேச சுற்றுலாத்துறை |
• நிர்வாகம் | ஆர்ஸ்லி குன்று நகரிய குழு, தலைவர்: மதனபள்ளி சார் ஆட்சியர் |
ஏற்றம் | 1,290 m (4,230 ft) |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
வாகனப் பதிவு | AP03 |
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்
தொகுசில பகுதிகளில் பூர்வீக தாவரங்கள் மாற்றப்பட்டு யூகலிப்டசு மரங்கள் அடர்த்தியாக வளர்க்கப்படுகின்றன. அலங்கார மரங்களுடன் கூடிய தோட்டங்களுடன் சில பகுதிகள் மாற்றம் கண்டுள்ளன. கடந்த காலத்தில் இப்பகுதியில் சாம்பார் மான் (இப்போது மீண்டும் காட்டுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது), காட்டுப்பன்றி (ஆங்கிலம்: wild bear) மற்றும் தேன் கரடி (ஆங்கிலம்: sloth bear) உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. [1] இப்பகுதியில் இருந்து 133 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் [2] [3] ஆண்டில் இப்பகுதியில் இருந்து முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட மஞ்சள் [4] கொண்டைக்குருவி அடங்கும். சுற்றியுள்ள பகுதியில் அரிதாக இருக்கும் மற்ற பறவைகள் கருங்கழுகு (black eagle) மற்றும் சோலைபாடி என்னும் வெள்ளை-ரம்ப் சாமா (White rumped shama) ஆகியவை அடங்கும். [5] [6] குந்தரின் தேரை அல்லது மலபார் தேரை அல்லது பாறையில் வாழும் தேரை (இருசொல் பெயர்: Duttaphrynus hololius) [7] இங்கு கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இங்கு (இருபெயர்: Diplocentrum recurvum Lindl) என்ற சுவிட்சர்லாந்து ஆர்க்கிட் மலர் மீண்டும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டது. [8] இப்பகுதியில் இருந்து பல வகையான பாறையில் வளரும் பாசி மற்றும் பூஞ்சைகளின் கூட்டு உயிரினமான லிச்சன்களும் (Lichen) இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. [9]
வெப்ப நிலை
தொகுகுறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 15 ஆகும் °C மற்றும் அதிகபட்ச வெப்பநிலை 30 ஆகும் °C. [10]
சுற்றுலா
தொகுஆர்ஸ்லி குன்றின் முக்கிய தொழில் சுற்றுலா. இந்த நகரத்தின் முக்கிய இடங்கள் பின்வருமாறு:
- கலி பந்தலு (காற்று பாறைகள்) - உள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 300 மீ தொலைவில், கலி பண்டா (காற்று பாறை) ஒரு பாறை சரிவு. இங்கு ஆண்டு முழுவதும் பலத்த காற்று வீசுகிறது
- வியூ பாயிண்ட் - இது ஆளுனர் பங்களாவிற்கு (Governor's Bungalow) பின்னால் உள்ளது. இது முழு பள்ளத்தாக்கு, அருகிலுள்ள மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளின் சிறந்த காட்சியை இங்கு காணலாம்..
- கல்யாணி, யூகலிப்டஸ் மரம் - 40 மீட்டர் உயரம் மற்றும் 4.7 மீட்டர் சுற்றளவு கொண்ட இராட்சத மரம்.
மக்கள்
தொகுமலைவாழிடமாக மாறுவதற்கு முன்பு, அதாவது டபிள்யூ.டி.ஹார்ஸ்லி வருவதற்கு முன்பு, இந்தப் பகுதி யானாடிஸ் மற்றும் செஞ்சஸ் பழங்குடியினரின் (ஆங்கிலம்: tribes of Yanadis and Chenchus) தாயகமாக இருந்தது. இங்கு வாழ்வாதாரத்திற்காக புங்கனூர் இன மாடுகளை வளர்த்து வருகின்றனர். இன்று, மலைகளில் பல்வேறு சமூக மக்கள் உள்ளனர். அவர்களில் சிலர் சிறிய உணவு விடுதிகளை நடத்துகிறார்கள், மற்றவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு ஜீப் ஓட்டுனர்களாக வேலை செய்கிறார்கள். [11]
வில்லியம் டி. ஆர்ஸ்லி 8 செப்டம்பர் 1834 அன்று செங்கல்பட்டில் பிறந்தார் [12] அங்கு அவரது தந்தை ஜான் ஆர்ஸ்லி 1817-51 வரை சென்னை குடிமைப் பணியில் (ஆங்கிலம்: Chennai Civil Service) பணியாற்றினார். 1831 ஆம் ஆண்டு குற்றாலத்தில் பிறந்த ரால்ப் என்ற மூத்த சகோதரர், 1856 ஆம் ஆண்டு பெல்லாரியில் தலைமை உதவி கலெக்டராக இருந்த இடத்தில் கொலை செய்யப்பட்டார். வில்லியம் ஏப்ரல் 1864 ஆம் ஆண்டு மேரி [13] மணந்தார். 1899 ஆம் ஆண்டு இறந்தார்.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Government of India (1908). The Imperial Gazetteer of India. Volume XIII. Gyaraspur to Jais. Oxford University Press. p. 178.
- ↑ Ghorpade, Kumar (1998). "Lists, records and Horsley Hills ornithology". Newsletter for Birdwatchers 38 (3): 53–54. https://archive.org/stream/NLBW38_3#page/n13/mode/2up.
- ↑ Subramanya, S; Prasad, J. N. (1996). "Yellowthroated Bulbuls at Horsley Hills". J. Bombay Nat. Hist. Soc. 93 (1): 55–58.
- ↑ Allen, P Roscoe (1908). "Notes on the Yellow-throated Bulbul Pycnonotus xantholaemus". J. Bombay Nat. Hist. Soc. 18 (4): 905–907.
- ↑ Subramanya, S.; Prasad, J.N. (1992). "Birds of Horsley Hills". Newsletter for Birdwatchers 32 (9–10): 8–10. https://archive.org/stream/NLBW32_910#page/n9/mode/2up.
- ↑ Prasanna, Manu; Belliappa, KM; Vittal, BS (1997). "Birds in Horsley Hills". Newsletter for Birdwatchers 37 (5): 76. https://archive.org/stream/NLBW37_5#page/n7/mode/1up.
- ↑ Kalaimani, A.; Nath, Anukul; Kumar, R. Brawin (2012). "A note on records of rare and endemic Duttaphrynus hololius (Günther, 1876) from Tamil Nadu, Eastern Ghats, India". Frog Leg 18: 27–30. http://www.zoosprint.org/ZoosPrintNewsLetter/Frog%20leg_18_2012.pdf. பார்த்த நாள்: 2022-05-04.
- ↑ Mahendranath, M.; Chetty, K.M.; Prasad, K. (2015). "A re-collection of Diplocentrum recurvum lindl. (Orchidaceae) after a lapse of 100 years or more from Andhra Pradesh, India". Journal of Threatened Taxa 7 (10): 7712–7715. doi:10.11609/JoTT.o4172.7712-5.
- ↑ Reddy, A.M; Nayaka, S; Shankar, P.C.; Reddy, S.R.; Rao, B R P (2011). "New distributional records and checklist of lichens for Andhra Pradesh, India". Indian Forester 137 (12): 1371–1376. https://www.researchgate.net/publication/266137578.
- ↑ Kohli, M.S. Mountains of India. pp. 168, 169.
- ↑ Francis, W. Imperial gazetteer of India.
- ↑ "FIBIS database". பார்க்கப்பட்ட நாள் 10 September 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "The Peerage". பார்க்கப்பட்ட நாள் 10 September 2015.