வள விபரிப்புச் சட்டகம்

(ஆர்.டி.எப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வள விபரிப்புச் சட்டகம் (ஆர்.டி.எப்) (Resource Description Framework (RDF)) என்பது உலகளாவிய வலையில் தகவல்களை உருவகிக்கப் பயன்படும் சட்டகம் ஆகும்.[1] குறிப்பாக இயந்திரங்கள் இலகுவாகப் புரிந்து கையாளக்கூடிய வகையில் தரவுகளை விபரிக்க இது பயன்படுத்தப்படுகின்றது. தொடக்கத்தில், இணைய வளங்கான மீதரவுக்கான ஒரு மாதிரியாக இது வடிவமைக்கப்பட்டது. எனினும் இன்று பொருளுணர் வலையின் தரவுகளை வெளியிட, வினவ, பரிமாற ஆர்.டி.எப் பயன்படுத்தப்படுகின்றது. இதனை பொருளுணர் வலைக்கான தரவு மாதிரி என்று பரவலாக விபரிப்பர்.[2]

ஆர்.டி.எப் இன் முதல் பதிப்பினை உலகளாவிய வலைச் சேர்த்தியம் 1999 ஆம் ஆண்டு வெளியிட்டது. இதன் 1.1 பதிப்பு 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

தரவு மாதிரி

தொகு

ஆர்.டி.எப் தரவு மாதிரியின் அடிப்படை எழுவாய்-பயனிலை-செயற்படுபொருள் என்ற மும்மை (triple) ஆகும். இந்த மும்மைகளான் ஆன கணம் (set of such triples) ஆர்.டி.எப் வரைவி அல்லது வரைபடம் எனப்படுகின்றது. ஆர்.டி.எப் வரைவியினை திசையுள்ள கோட்டுருவாக காட்சிப்படுத்தலாம். ஒவ்வொரு மும்மையும் கணு-விளிம்பு-கணு வாக உருவகப்படுத்தப்படுகின்றது.

 

ஆர்.டி.எப் வரைவியில் உள்ள கணுக்கள் மூன்று வகைப்படலாம்: அனைத்துலக வள அடையாளம்காட்டிகள் (IRIs), நிலையுருக்கள் (literals), வெற்றுக் கணுக்கள்.

ஆர்.டி.எப் எடுத்துக்காட்டு

தொகு

பின்வரும் எளிமையான எடுத்துக்காட்டு, நூலுக்கான ஒரு நூலினை ஆர்.டி.எப் இல் உருவகப்படுத்துகின்றது. ஆர்.டி.எப் பினை பல்வேறு வழிகளில் எழுதலாம் (serialize). கீழ்வரும் எடுத்துகாட்டு எக்சு.எம்.எல் இனைப் பயன்படுத்துகிறது. இந்த நூலுக்கான dbpedia.org இன் ஆர்.டி.எப்பினை இங்கு காணலாம்.

<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF
	xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">

	<rdf:Description rdf:about="http://dbpedia.org/resource/Mattakallappu_Manmiyam-எ.கா">
		<dc:title>மட்டக்களப்பு மான்மியம்</dc:title>
		<dc:subject>இலங்கைத் தமிழ் இலக்கியம்</dc:subject>
		<dc:publisher>Batticaloa District Cultural Board</dc:publisher>
	</rdf:Description>

</rdf:RDF>

மேற்கோள்கள்

தொகு
  1. "RDF 1.1 Concepts and Abstract Syntax". உலகளாவிய வலைச் சேர்த்தியம். 25 February 2014. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "RDF-101". cambridgesemantics.com. Archived from the original on 2016-08-25. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள_விபரிப்புச்_சட்டகம்&oldid=3571022" இலிருந்து மீள்விக்கப்பட்டது