ஆர். மகாதேவன் (நீதிபதி)

இந்திய உச்சநீதிமன்ற நீதியரசர்

ஆர். மகாதேவன் (R. Mahadevan-பிறப்பு 10 சூன் 10,1963) என்பவர் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி ஆவார். சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த இவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காப்பூர்வாலா 23 மே 2024 அன்று ஓய்வு பெற்ற பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) பொறுப்புவகித்தார்.[1][2]

மாண்புமிகு நீதியரசர்
ஆர். மகாதேவன்
இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 சூலை 2024
பரிந்துரைப்புதனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்
நியமிப்புதிரௌபதி முர்மு
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி
பதவியில்
24 மே 2024 – 17 சூலை 2024
நியமிப்புதிரௌபதி முர்மு
முன்னையவர்சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா
பின்னவர்டி. கிருஷ்ணகுமார் (பொறுப்பு)
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
பதவியில்
25 அக்டோபர் 2013 – 23 மே 2024
பரிந்துரைப்புப. சதாசிவம்
நியமிப்புபிரணப் முகர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சூன் 1963 (1963-06-10) (அகவை 61)
சென்னை
முன்னாள் கல்லூரிசென்னை சட்டக்கல்லூரி

மகாதேவன் 1963ஆம் ஆண்டு சூன் 10ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். சென்னை சட்டக் கல்லூரி சட்டப் பட்டம் பெற்றார். சட்டப் பட்டம் முடித்த பிறகு 1989ஆம் ஆண்டில் சென்னை வழக்குரைஞர் கழகத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து வழக்கறிஞர் பணியினைத் தொடங்கினார். மறைமுக வரிகள், சுங்க மற்றும் மத்திய கலால் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டத்துறையில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். தமிழக அரசின் கூடுதல் அரசு மனுதாரராகவும் (வரி) பணியாற்றிய இவர் 2013ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[3]

உச்சநீதிமன்ற நீதிபதியாக

தொகு

உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த இடத்திற்கு ஆர். மகாதேவனை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்யதன் அடிப்படையில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆர். மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._மகாதேவன்_(நீதிபதி)&oldid=4096092" இலிருந்து மீள்விக்கப்பட்டது