ஆறுநாட்டு வெள்ளாளர்

(ஆறுநாட்டு வேளாளர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆறுநாட்டு வெள்ளாளர் (Arunattu Vellalar) எனும் சாதி வெள்ளாளர்களின் உட்பிரிவுகளாகும். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள ஆறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களது முக்கிய தொழில் வேளாண்மை ஆகும்.[1]

ஆறுநாட்டு வெள்ளாளர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, இலங்கை, மலேசியா
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து

ஆறுநாட்டு வெள்ளாளர் என்னும் பெயர் ஏற்படும் முன் வேளாளர்கள் அனைவரும் ஒரே இனமாக வேளாண்மை செய்து வந்தனர். நாளடைவில் ஜனத்தொகையின் காரணமாக வேளாளர்கள் மற்றும் அவரவர் உறவினர்கள் ஒன்றுகூடி தனித்தனி கூட்டமாக வாழ முடிவுசெய்தனர். அவரவர் செய்யும் விவசாயம் மற்றும் தொழில் சார்ந்து தங்களைச் சிறுசிறு பிரிவுகளாகப் பிரித்து கொண்டனர்.

பிரிவுகள்

தொகு
  1. திருப்படையூர் நாடு
  2. பாச்சூர் குறட்டுப்பத்து நாடு
  3. கீழ் வள்ளுவப்ப நாடு
  4. மேல் வள்ளுவப்ப நாடு
  5. கரி காலி நாடு
  6. ஆமூர் நாடு

ஆகிய ஆறு நாடுகளில் வாழ்ந்து வந்த வேளாளர்கள் தங்களை ஆறுநாட்டு வேளாளர்கள் எனப் பெயரிட்டு அழைத்தனர். கி.பி. 1176 ஆம் வருடம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கூடி தங்கள் அனைவரையும் ஆறுநாட்டு வேளாளர்கள் என ஓர் செப்பு பட்டயம் எழுதி, தங்கள் குடும்பங்களை முப்பத்தாறு கோத்திரங்களாக வகுத்துக்கொண்டனர். கோத்திரப்பிரிவுகள் திருவானைக்கோவில் ஆறுநாட்டு வேளாளர் சத்திரத்திலுள்ள செப்புப் பட்டயம் மூலம் அறிய முடிகிறது.[சான்று தேவை]

கூட்டங்கள்/கிளைகள்/குலங்கள்

தொகு

கூட்டம்/கிளை/குலம் என்பது ஆண் வழிவம்சாவழியை குறிப்பது ஆகும். தற்பொழுது 32 கூட்டப்பிரிவுகளே/குலப்பிரிவுகளே வழக்கத்தில் உள்ளது. அவற்றைப்பற்றி கூட்டம் பகுதியில் காணலாம். ஆறுநாட்டு வேளாளர்களாகின் ஆதி ஊர் சிதம்பரம் ஆகும். ஆறுநாட்டு வேளாளர்கள் இயற்கை சீற்றங்களின் காரணமாகச் சிதம்பரத்தை விட்டு, திருச்சி மாவட்டத்தில் 1700-1800 இடைப்பட்ட வருடங்களில் குடியேறி உள்ளனர். அமரர் ஸ்ரீ மான் வீர.கருப்பண்ணபிள்ளை, தற்போதுள்ள திருவானைக்கோவில் ஆறுநாட்டு வேளாளர் அன்னதான சத்திரத்திற்கு மனையிடத்தையும் மேற்புறமுள்ள கட்டிடங்களையும் நம்மினத்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள 1891 ஆம் வருடம் இனாம்சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார்.[சான்று தேவை]

32 கூட்டம்/கிளை/குலம்

தொகு
  1. ஆலத்துடையான்
  2. எதுமலுடையான்
  3. களத்துடையான்
  4. களப்பான் (வளமுடையான்)
  5. காருடையான்
  6. குணக்கொத்துடையான்
  7. குருவருள்வுடையான்
  8. கூத்துடையான்
  9. கொன்னக்குடையான்(சேர்குடி)
  10. கோட்டுடையான்
  11. கோனுடையான்
  12. சமயமந்திரி
  13. சனமங்கலத்துடையான்
  14. சாத்துடையான்
  15. சிறுதலுடையான்
  16. திருச்சங்குடையான்
  17. தெத்தமங்கலத்துடையான்
  18. தேவங்குடையான்
  19. நத்தமுடையான்
  20. நல்லுடையான்
  21. நிம்மலுடையான்
  22. பனையடியான்
  23. பாவலுடையான்
  24. பூண்டிலுடையான்
  25. மருதுடையான்
  26. மாத்துடையான்
  27. மிரட்டுடையான் (குருவலுடையான்)
  28. முருக்கத்துடையான்
  29. வளவுடையான்
  30. வில்வராயன்
  31. வெண்ணாவலுடையான்
  32. சக்கரவர்த்தி

மேற்கோள்கள்

தொகு
  1. Singh, Kumar Suresh (1997). People of India: Tamil Nadu. Vol. 3. Affiliated East-West Press for Anthropological Survey of India. p. 1624. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185938882. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறுநாட்டு_வெள்ளாளர்&oldid=3885247" இலிருந்து மீள்விக்கப்பட்டது