ஆலங்கானம் என்னும் ஊர் தலையாலங்கானம் பரணிடப்பட்டது 2011-10-11 at the வந்தவழி இயந்திரம் என்றும் வழங்கப்படுகிறது. இது திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது.[1] நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் இதனை வென்றதால் ‘தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ என்று சிறப்பிக்கப்படுகிறான். இவனது வெற்றிகளை ஆலம்பேரி சாத்தனார் [2] கல்லாடனார் [3][4] நக்கீரனார் [5] வெண்கண்ணியார் [6] இவனது அவைக்களத்தில் தலைமைப் புலவராக விளங்கிய மாங்குடி மருதனார் [7] ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். இவன் போருக்குப் போகுமுன் இவனே வஞ்சினம் கூறிப் பாடிய பாடலும் உள்ளது.[8]

சான்று மேற்கோள் தொகு

  1. அருள்மிகு ஆடவல்லநாதர் திருக்கோயில், தலையாலங்காடு, செம்பங்குடி அஞ்சல், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம், PIN – 612603
  2. காலியல் நெடுந்தேர்க் கைவண் செழியன் ஆலங்காத்து அமர் கடந்து உயர்த்த வேலினும் பல்லூழ் மின்னி ஆலம்பேரி சாத்தனார் அகம் 175
  3. இயல்தேர்ச் செழியன் நேரா எழுவர் அடிப்படக் கடந்த ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது கல்லாடனார் அகம் 209
  4. ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட கால முன்ப கல்லாடனார் புறம் 23
  5. கொடித்தேர்ச் செழியன் ஆலங்காத்து ஆன் தலை சிவப்பச் சேரல் செம்பியன் சினங்கெழு திதியன் போர்வல் யானைப் பொலம்பூண் எழினி நார் அரி நறவின் எருமையூரன் தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநன் என்று எழுவர் நல்வலம் அடங்க ஒருஉபகல் முரசொடு வெண்குடை அகப்படுத்து உரைசெலக் கொன்று களம் வேட்ட ஞான்றை நக்கீரர் அகம் 36
  6. ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த வேல்கெழு தானை செழியன் பாசறை உறை கழி வாளின் மின்ன பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் நற்றிணை 387
  7. ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த அரசு பட அமர் உழக்கி முரசு கொண்டு களம் வேட்ட – வேந்தே மாங்குடி மருதனார் – மதுரைக்காஞ்சி 127
  8. புறம் 72
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலங்கானம்&oldid=3233211" இருந்து மீள்விக்கப்பட்டது